'தளபதி 65' படத்தின் முக்கிய அறிவிப்பு மற்றும் பிரேக்கிங் அப்டேட்

விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய மற்றும் லேடஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Last Updated : Oct 2, 2020, 03:36 PM IST
'தளபதி 65' படத்தின் முக்கிய அறிவிப்பு மற்றும் பிரேக்கிங் அப்டேட் title=

பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் (AR Murgadoss) அவர்கள் இயக்கத்தில் தளபதி (Thalapathy 65) விஜய் (Vijay) நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு அல்லது பொங்கல் 2021 ஐச் சுற்றி வெளியிடப்படும். அனைத்து விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படங்களின் பாரம்பரியத்தை பின்பற்றி தீபாவளி 2021 ஆம் ஆண்டில் 'தளபதி 65' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு தமன் இசையமைக்கவுள்ளார், முதல்முறையாக இசைக்கலைஞர் ஒரு நேர்காணலின் போது படத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார்.

 

ALSO READ | அஜித்தை தாக்கிய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்....காரணம் இதுதானா?

தமன்னா முன்னணி நடிகையாக இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது, அதன்படி அவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவார். 

இந்நிலையில் படத்தைப் பற்றிய சில விஷயங்கள் கசிந்துள்ளன. அதன்படி விஜய்க்கு படத்தில் இரட்டை வேடமாம். அதில் ஒரு கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் தன்மை கொண்டதாம். மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜுடன் விஜய்யின் 'மாஸ்டர்' பொங்கல் 2021 ஐ ஒட்டி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த 'மாஸ்டர்' தொற்றுநோய் காரணமாக தாமதமானது.

 

ALSO READ | 'Bigil' ஃபர்ஸ்ட் லுக்கிற்குப் பிறகு, அதிகம் ரீட்வீட் ஆன நடிகர் Vijay இன் இந்த செல்பி...!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News