நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம்

நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார். 

Last Updated : Feb 26, 2017, 02:58 PM IST
நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம் title=

சென்னை: நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார். 

இவர் 1983-ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகரானார். 

இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42. தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார். 

Trending News