டாடா நிறுவனத்தின் டாடா நியூ (Tata Neu) செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. டாடா நிறுவன ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த செயலி அப்கிரேடு செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Android மற்றும் iOS என வெர்சன்களிலும் வொர்க் ஆகும் இந்த செயலி, 'சூப்பர் ஆப்' என அழைக்கப்படுகிறது. இந்த செயலி மூலம் ஒருவர் மொபைல் ஃபோனுக்கான கட்டணம் செலுத்துவது முதல் தனிஷ்க் மூலம் நகைகளை வாங்குவது, பிக்பாஸ்கெட்டில் தினசரி மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது என அனைத்தையும் இதன் மூலம் செய்யலாம்.
இந்த செயலி அறிமுகத்தின்போது பேசிய டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன், வாடிக்கையாளர்கள் வாழ்க்கையை எளிமையாகவும் எளிதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம் எனத் தெரிவித்திருந்தார். தேர்வு செய்வதற்கான வசதி மற்றும் கட்டுப்பாடு, தடையற்ற அனுபவம் மற்றும் விசுவாசம் ஆகியவை டாடா நியூவின் மையப்புள்ளிகளாக இருக்கும் எனக் கூறியிருந்த அவர், விஸ்தாரா, ஏர் இந்தியா, டைட்டன், தனிஷ்க், டாடா மோட்டார்ஸ், டாடா ஏஐஏ ஆகியவை விரைவில் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மருந்து முதல் மளிகை சாமான்கள் வரை, விமான நிறுவனங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல் நகைகளை வாங்குவது வரை, அனைத்து செயல்பாடுகளையும் பயனர்கள் இந்த செயலி மூலம் செய்ய முடியும். வழக்கமாக இந்த ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி செயலியை பயன்படுத்த வேண்டி இருக்கும். எனினும், டாடா நியூ செயலி மூலம் அனைத்து பணிகளையும் ஒரே தளத்தில் செய்து முடிக்கலாம். இப்போது கூடுதலாக ஒன்று இந்த செயலியில் இணைந்துள்ளது
விரைவில் கார்களையும் Tata Neu செயலி மூலம் வாங்க முடியும். டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீக் பால் கூறுகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற பிராண்டுகளைப் போலவே நியூ பிளாட்ஃபார்மில் டாடா மோட்டார்ஸைக் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | Tata Neu டாடா நிறுவனத்தின் ஒற்றை செயலியில் கார் முதல் விமானப் பயணம் வரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR