தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா... உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன?

The Kerala Story Issue: வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கேரளாவில் கடுமையான கண்டனத்தை பெற்றுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து மாநில உறவுத்துறை, தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2023, 10:50 AM IST
  • தி கேரளா ஸ்டோரி பாலிவுட்டில் தயாராகி உள்ளது.
  • இப்படம் வரும் மே. 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
  • இப்படத்தில் 10 சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு 'ஏ' தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா... உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன? title=

The Kerala Story Issue: இந்தியில் தயாராகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் வற்புறுத்தியுள்ளன. 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உண்மை கதை(?)

படத்தின் டிரைலரில் கேரளாவில் பெண்கள் காணாமல் போய் வருகின்றனர் என்றும், பெண்களை மதமாற்றம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து இருப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மை கதை என்றும் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் நடக்கவில்லை என்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் கண்டனம் கிளம்பியது. 

மேலும் படிக்க | என்ன மணிகண்டன் ஆரம்பிக்கலாமா..லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட குட்நைட் டிரைலர்

32 ஆயிரம் பெண்கள் டூ 3 பெண்கள்

குறிப்பாக, படத்தின் டிரைலர் யூ-ட்யூப்பில் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரின் யூ-ட்யூப் விவரணையில்  (Description), 'கேரளாவில் உள்ள 32,000 பெண்களின் இதயத்தை உடைக்கும் மற்றும் நெஞ்சை பதற வைக்கும் கதைகள்' என இந்த படம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவே, தற்போது 32,000 பெண்கள், 3 பெண்கள் என யூ-ட்யூப் விவரணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், கேரளாவில் வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சை காட்சிகளை தணிக்கை குழு நீக்கி 'ஏ' சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் நாளை மறுநாள் (மே 5) திரைக்கு வரும் நிலையில், கேரளாவில் தடை செய்யப்படுமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

உளவுத்துறை பரிந்துரை

இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

தடை விதிக்க மறுப்பு

இந்த படத்தை திரையரங்கம் மற்றும் OTT தளங்களில் படத்தை வெளியிட தடை கோரி ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. படத்திற்கு சான்றிதழும், வாரியத்தின் அனுமதியும் கிடைத்துவிட்டதாக கூறியதையடுத்து மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

"ஒரு நபர் மேடையில் ஏறி, கட்டுப்பாடற்ற பேச்சைத் தொடங்குவது போல் இல்லை, இது. திரைப்படத்தின் வெளியீட்டை நீங்கள் எதிர்க்க விரும்பினால், நீங்கள் தணிக்கை சான்றிதழை எதிர்த்து பொருத்தமான வாரியம் மூலம் எதிர்ப்பு தெரிவியுங்கள்" என்று நீதிபதி கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த குந்தவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News