சுவாதி கொலை வழக்கு டிரெய்லர்!

Last Updated : May 31, 2017, 09:55 AM IST
சுவாதி கொலை வழக்கு டிரெய்லர்! title=

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சுவாதி கொலை சம்பவம் சினிமாவாகிறது.

இயக்கியவர் எஸ்.டி.ரமேஷ் ’சுவாதி கொலை வழக்கு’ என்று டைட்டில் வைத்து இயக்குகிறார். இது, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சுவாதியின் கொலை சம்பவ கதையாகும்.

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே. சுப்பையா தயாரிக்கும் இந்தப் படத்தில், சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக, அஜ்மல் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதியாக, ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் ஏ.வெங்கடேஷ், வக்கீலாகவும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, ஜோன்ஸ் ஆனந்த். இசை, ஷாம் டி ராஜ். கதை வசனத்தை இயக்குனர் ஆர்.பி.ரவி எழுதியுள்ளார். 

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது.

Trending News