Suriya 44 : சூர்யாவிற்கு வில்லனாகும் இளம் நடிகர்! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..

Suriya 44 Update : நடிகர் சூர்யாவின் 44வது படத்தை கார்ததிக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 29, 2024, 05:26 PM IST
  • சூர்யாவின் 44வது பட அப்டேட்
  • வில்லனாக நடிக்கும் இளம் நடிகர்
  • யார் தெரியுமா?
Suriya 44 : சூர்யாவிற்கு வில்லனாகும் இளம் நடிகர்! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்.. title=

Suriya 44 Update : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், சூர்யா. இவரது 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் வில்லன் யார் தெரியுமா? 

கோலிவுட் உலகில் டாப் நடிகராக இருப்பவர் சூர்யா. திரைத்துறையில் பெரிய கலைஞராக விளங்கிய சிவகுமாரின் மகனான இவரும், சினிமா கனவுகளுடன்தான் வளர்ந்தார். 22 வயதில் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்திருந்த இவர், தொடர்ந்து மென்மையான ஹீரோவின் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். விஜய்-அஜித்திற்கு எந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே கூட்டம் இவருக்கும் இருக்கிறது. 

வித்தியாச கதைகளை தேர்ந்தெடுக்கும் சூர்யா…

காதல்-காமெடி-கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக தனது கதை செலக்ஷனில் வித்தியாசம் காட்டி வருகிறார். சூரரை போற்று படமும், ஜெய் பீம் படமும் அதற்கு பெரிய சான்று. தனது படங்கள் மூலம் சமூக கருத்து பேசி வரும் இவர், பொது வெளியிலும் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு ‘அறம்’ அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார். 

அது மட்டுமன்றி, இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் வகையில் இருக்கின்றன. எனவே, தொடர்ந்து பல தமிழ் சினிமா இயக்குநர்களும் இவரிடம் கதை கூறும் முனைப்பில் இருக்கின்றனர். 

2 ஆண்டுகளாக படங்களே வெளியாகவில்லை!

நடிகர் சூர்யா, கடைசியாக கதாநாயகனாக நடித்திடிருந்த படம், எதற்கும் துணிந்தவன். இந்த படம், 2021ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ஹிட் அடித்தாலும் விமர்னத்தில் கொஞ்சம் சறுக்கியது. 2022ஆம் ஆண்டு விக்ரம் படத்தில் 7 நிமிட கேமியோ ரோலில் நடித்த இவர், அதன் பிறகு மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கட்டரி படத்தில் கெளரவ தாேற்றத்தில் வந்தார். 2 ஆண்டுகளாக இவர் நாயகனாக நடித்த படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..

சூர்யா 44:

சில மாதங்களுக்கு முன்னர், சூர்யா நடிக்கவிருக்கும் அவரது 44வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது.இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்தியின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இந்த நிலையில், இப்படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 

வில்லன் இவரா? 

நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 44வது படத்தில் அவருக்கு வில்லனாக வருவது யார் தெரியுமா? உரியடி விஜயகுமாரை இந்த படத்தில் வில்லனாக இறக்க முடிவு செய்துள்ளாராம், கார்த்திக் சுப்புராஜ். வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Uriyadi Vijayakumar

கங்குவா:

நடிகர் சூர்யா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கங்குவா பட வேலைகளில் படு பிசியாக இருக்கிறார். இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். இது சயின்ஸ் ஃபிக்ஷன்/ஃபேண்டசி த்ரில்லர் கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தின் மிரட்டலான டீசர் ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. படத்தின் ரிலீஸை எதிர்நாேக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க |  ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News