நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கபட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2021, 10:41 AM IST
நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு! title=

Rajinikanth Dadasaheb Phalke Award: இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கபட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 51 வது தாதா சாஹேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு மே 3 ஆம் தேதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javdekar) கூறுகையில், “இதுவரை இந்த விருது சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பு கொடுத்த 50 பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது 51 வது விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு (Rajinikanthவழங்கப்படும். இந்த விருதுக்கு ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாட்டுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று எதிரபார்க்கிறேன்.

 

ALSO READ | Super star ரஜினியின் திருமண நாள்: இன்ஸ்டாவில் அன்பு நிறைந்த வாழ்த்தை பகிர்ந்தார் ஐஸ்வர்யா தனுஷ்

தாதா சகோப் பால்கே விருது
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது (Dadasaheb Phalke Award) இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் நடிகர் சிவாஜிகணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது அறிவிக்கப்பட்டதை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருமே மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். மேலும், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News