இணையதளங்களில் வெளியான தர்பார்; அதிர்ச்சிக்குள்ளான படக்குழு

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்தின் படமான "தர்பார்" இணையத்தில் கசிந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2020, 06:10 PM IST
இணையதளங்களில் வெளியான தர்பார்; அதிர்ச்சிக்குள்ளான படக்குழு title=

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167 வது திரைப்படமான "தர்பார்" (Darbar) திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை லைகா புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் தர்பார் படம் ஒரு மசாலா பொழுதுபோக்கு படமாக உள்ளது என பார்வையாளர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே படத்தின் அதன் விளம்பரங்களும் டிரெய்லரும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடுத்துள்ளர். 

இன்று அதிகாலை 4 மணி முதல் படம் திரையிடப்பட்டது. திரையரங்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருபக்கம் "தர்பார்" படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், மறுபுறம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட "தர்பார்" படம் இணையத்தில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட ஆக நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகி உள்ளதால், படக்குழு மற்றும் விநியோகஸ்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் தர்பரின் வருவாய் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. படம் வெளியான சில மணிநேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் படத்தை வெளியிட்டது.

மேலும் லைக்கா நிறுவனம் தரப்பில், அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட "தர்பார்" படம் இணையதளங்களில் வெளியிடப்பட்டால், பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இணையதளங்களில் தர்பார் திரைப்படத்தை திருட்டுத் தனமாக வெளியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News