மிகப் பெரிய அப்டேட்: இயக்குனர் வெற்றிமாறனின் புதிய படமா?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 28, 2022, 11:39 AM IST
  • வெற்றி மாறன் விடுதலை
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு படமா?
மிகப் பெரிய அப்டேட்: இயக்குனர் வெற்றிமாறனின் புதிய படமா? title=

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவராவார் இயக்குனர் வெற்றிமாறன். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது.

தற்போது இவரது இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் விடுதலை படம் உருவாக்கி வருகிறது. முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | மீண்டும் இருளுக்குள்... நடிகையின் வேதனை பதிவு

மறுபுறம் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்  இணைந்து நடித்து வருகின்றனர். அந்தப் படத்தின் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முதலில் சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் எழுதப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முழு நீளமாக வரும் வகையில் மாற்றினார் வெற்றிமாறன். இதனால் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர். விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலை படத்தில் முதன்மை கதாபாத்திரம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.  ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் விடுதலை படத்தை தயாரித்து வருகிறது.

இதற்கிடையில் ஆஹா என்கிற ஆப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஒரு முக்கிய தகவலை வழங்கியுள்ளது. அதன்படி, இன்று இயக்குனர் வெற்றிமாறனின் மிகப்பெரிய அப்டேட்டை காத்திருங்கள் என்று தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளது. இந்த செய்தி வெளியான முதல் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கிறானர். எனவே இது தொடர்பான அப்டேடை பெற  நாம் காத்து இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பா. ரஞ்சித்துடன் சம்பவம் செய்யப்போகும் நட்டி, ஸ்ரீகாந்த்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News