பாக்ஸ் ஆஃபீஸில் கொடி கட்டி பறக்கும் பதான்..! வாரிசு - துணிவு கலெக்ஷன் பாதிப்பு

Pathaan Box Office:  ஷாரூக்கானின் பதான் படம் இப்போது ரிலீஸாகி இருப்பதால், இவ்வளவு நாள் பாக்ஸ் ஆஃபீஸில் கோலோச்சிக் கொண்டிருந்த துணிவு மற்றும் வாரிசு கலெகஷ்னில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2023, 10:23 AM IST
பாக்ஸ் ஆஃபீஸில் கொடி கட்டி பறக்கும் பதான்..! வாரிசு - துணிவு கலெக்ஷன் பாதிப்பு title=

விஜய் மற்றும் அஜித் குமார் நடித்த படங்கள் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ஏறக்குறைய சரிசமமான வசூலை வாரிக் குவித்துள்ளன. குறிப்பாக தென்னிந்திய சினிமா மார்க்கெட்டில் இப்போதைய கலெக்ஷனில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் மட்டுமே டாப் கலெக்ஷனில் இருக்கின்றன. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படங்கள் இருக்கின்றன. 

மேலும் படிக்க | அந்த மனசு இருக்கே... பிக்பாஸில் ஜெய்த்த பணத்தை தானம் கொடுத்த அசீம்

இப்போது, இந்த படங்களின் பாக்ஸ் ஆஃபீஸ் போட்டியாக ஷாரூக்கானின் பதான் களமிறங்கியுள்ளது. இந்த படங்களுக்கு நிகராக பதான் படம் தென்னிந்திய மார்க்கெட்டில் கலெஷக்னை அள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. போதுமான தியேட்டர்கள் கிடைப்பது பிரச்சனையாக இருந்தாலும், இதுவரை வந்திருக்கும் விமர்சனங்களில் பாசிடிவ் அதிகமாக இருப்பதால் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கூட ஷாரூக்கானின் பதான் படத்துக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர். 

தமிழக பாக்ஸ் ஆஃபீஸ் கலெகஷனை பொறுத்தவரை துணிவு முன்னணியிலும், வாரிசு இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இப்போது, இந்த படங்களுக்கு போட்டியாக களமிறங்கியிருக்கும் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படமும் பெரும்பாலான இடங்களில் போதுமான தியேட்டர்களில் ஒளிப்பரப்படுகின்றன. வட இந்தியாவில் வசூலை வாரிக் குவிக்கும் பதான் தமிழகத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது. 

ஷாருக்கானின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தீபிகா படுகோனின் அசத்தல் நடிப்பு ஆகியவை சூப்பராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான கலெக்ஷன் பதான் படத்தினால் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே திரை வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனென்றால், அதேநேரத்தில் அந்த படங்களின் ஒட்டுமொத்த கலெக்ஷனை முறியடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தளபதி 67.. இன்னும் தோ கிலோ மீட்டர்.. வாரிசுகளை புலம்பவிடும் லோகேஷ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News