ஸ்பைடர்: இன்று இசை வெளியாகிறது!

Last Updated : Sep 9, 2017, 05:58 PM IST
ஸ்பைடர்: இன்று இசை வெளியாகிறது! title=

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் இசை இன்று வெளியாகிறது!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைபடத்தின் இசை இன்று மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News