பாலிவுட் படங்களை காலி செய்த தென்னிந்திய படங்கள்

இந்த ஆண்டில் வெளியான ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப் 2 உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் பாலிவுட்டை ஆட்டம் காண வைத்திருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 6, 2022, 03:30 PM IST
  • பாலிவுட் படங்களை காலி செய்த தென்னிந்திய படங்கள்
  • ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப் படங்கள் வசூல் மழை
  • விக்ரம் படத்திற்கும் பாலிவுட்டில் அமோக வரவேற்பு
பாலிவுட் படங்களை காலி செய்த தென்னிந்திய படங்கள் title=

பாலிவுட் மார்க்கெட் மிகப்பெரியது என்பதால், வசூல் ரீதியாக பாலிவுட் படங்கள் எப்போதும் கோலோச்சும். ஆனால், கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு, நிலைமை தலைகீழானது. ஓடிடி பிளாட்ஃபார்ம் தலையெடுத்ததால் பான் இந்தியா மார்க்கெட் உருவாகி, தென்னிந்திய படங்கள் பாலிவுட் திரையுலகில் கோலோச்சத் தொடங்கின. வசூல் ரீதியாகவும் சக்கைபோடுபோட்டதால், பாலிவுட் உலகம் ஆடிப்போயிருக்கிறது. தென்னிந்திய படங்களுக்கு போட்டியாக அங்கு ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவி, பாக்ஸ் ஆஃபீஸில் தென்னிந்திய படங்கள் ஹிட் அடிக்க தடம் போட்டுக் கொடுத்தன.

மேலும் படிக்க | Kangana Ranaut : கங்கனா கூட வேலை செஞ்சதுதான் என்னோட பெரிய தவறு : கொதித்த இயக்குநர்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்தியில் வசூலை வாரிக் குவித்தது. பல நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய அந்தப் படம் பாலிவுட் மார்க்கெட்டில் மட்டும் சுமார் 300 கோடியை வசூலித்தது. இந்தப் படத்துக்கு அடுத்தப்படியாக வெளியான கேஜிஎப் 2 படம், ஆர்ஆர்ஆர் பாக்ஸ் ஆஃபீஸை முறியடித்து, சக்கரவர்த்தியாக முதல் இடத்தில் அமர்ந்தது. பாலிவுட்டில் மட்டும் யாஷின் கேஜிஎப் 400 கோடியை வசூலித்திருக்கிறது.

இந்தப் படங்கள் வெளியான சமயத்தில், பாலிவுட்டில் ரிலீஸ் செய்யப்பட்ட கங்கனா ரனாவத்தின் தக்கட், பச்சன் பாண்டே, பிரித்திவிராஜ் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே ரிலீஸ் ஆன அக்ஷயக்குமாரின் பக்சன் பாண்டே, 100 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ரிலீஸாகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மார்க்கெட்டில் வசூல் வேட்டை நடத்திய கமலின் ‘விக்ரம்’ திரைப்படமும் பாலிவுட்டில் கணிசமான கவனத்தை ஈர்த்தது. வசூலிலும் குறிப்பிடத் தகுந்த லாபத்தை பெற்று அசத்தியது. 

அடுத்தடுத்து வெளியான தரமான தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட் உலகை அதிர வைத்துள்ளதால், நல்ல படங்களை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு இயக்குநர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தரமான படம் என்றால் ஏற்றுக் கொள்ள பாலிவுட் தயாராக இருப்பதை உணர்ந்து கொண்ட தென்னிந்திய இயக்குநர்கள், பெரும் பட்ஜெட் படங்களை பான் இந்தியா மார்க்கெட்டை மனதில் வைத்து உருவாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஜெய்ஹிந்த் - சூர்யா மீது சர்ச்சையை கிளப்பும் காயத்ரி ரகுராம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News