நடிகர் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். பாடகியான இவர் தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 3, வீரம், லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் தற்போது பிரபாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்டோரின் படங்களிலும் பிஸியாக நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த ஸ்ருதி ஹாசன், “சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு சினிமா துறையில் ஆணாதிக்கம்தான் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ் பெண்கள், சினிமா துறைக்கு வர தயங்குவதாக சொல்வது பற்றியும் யோசிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த சமூகமும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், சினிமாவை மட்டும் ஒதுக்குவது ஏற்புடையதல்ல. உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பே திரையுலகத்தில் பாலியல் தொந்தரவு தரும் சூழலும் உள்ளது. இதையெல்லாம் மீறித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது.
மேலும் படிக்க | எப்படி இருக்கிறது எஸ்ஜே சூர்யாவின் 'கடமையை செய்' படம்? திரைவிமர்சனம்!
நட்சத்திரக் குழந்தைகளுக்கு பட வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தொழில்துறையில் நுழைவதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறார்கள். அதன் பிறகு, அவர்கள் துறையில் நிலைப்பதற்கு அவர்களுக்கு சொந்த திறமை இருக்க வேண்டும். நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் எனக்கு யாரும் சிபாரிசு செய்யவில்லை இப்போதும் நான் எனதுசொந்த காலில் தான் நிற்கிறேன். இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன” என்றார்.
மேலும் படிக்க | பெண்களின் நடத்தை பற்றி 'சக்திமான்' சர்ச்சைப் பேச்சு! வெடித்தது அடுத்த பிரச்னை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ