தெருக்குரல் அறிவு குரலில் இணையத்தை கலக்கும் 'பிரின்ஸ்' புதிய பாடல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அக்.21ஆம் தேதி வெளியாக உள்ள 'பிரின்ஸ்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 14, 2022, 09:24 PM IST
  • பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் அக். 9ஆம் தேதி வெளியானது.
  • இப்படத்தின் இரண்டு பாடல்கள் முன்னர் வெளியாகி இருந்தது.
  • மூன்றாவது பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியும் உள்ளார்.
தெருக்குரல் அறிவு குரலில் இணையத்தை கலக்கும் 'பிரின்ஸ்'  புதிய பாடல்! title=

மாறி தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கென்று பெரும் ரசிகர்க் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சிவகார்த்திகேயனை மிகவும் விரும்புகின்றனர். சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. அந்த இரண்டு படங்களும் 100  கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேக் டூ பேக் 100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன் நுழைந்தார். இதனைப் பார்த்து கோலிவுட்டே ஆச்சரியம்தான் பட்டது.

இந்தச் சூழலில் இரண்டு படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.இந்தப் படமானது சிவகார்த்திகேயனுக்கு முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  தனுஷ் பாராட்டிய கந்தாரா... கேஜிஎஃப் 2-வை மிஞ்சியது - நாளை தமிழில்!

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துவருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவடைந்தது. இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த அக். 9ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து, இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக். 21ஆம் தேதி அன்றே வெளியாக உள்ளதால், படத்தின் இறுதிகட்ட வேலைகளும், பிரமோஷனும் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

'Who Am I?' (நான் யாரு?)  என பெயரிடப்பட்ட இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ யூ-ட்யூபில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.  பிம்பிலிக்கி பிலாப்பி, ஜெஸ்ஸிகா இப்பாடலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் வெளியாகி மூன்று மணிநேரத்தில் 3.8 லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிகாட்டுகிறது. 

தமன் இசையமைத்துள்ள இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியும் உள்ளார். இப்பாடலுக்கு சாண்டி நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | பிரின்ஸ் சிவகார்த்திகேயன்... வெளியான அப்டேட்; குஷியில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News