தெலுங்கு படத்தில் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் அனுதீப் கேவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 07:35 PM IST
  • முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
  • டான் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்
  • இயக்குனர் அனுதீப் கேவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு படத்தில் சிவகார்த்திகேயன்!  title=

Sivakarthikeyan: தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஜதி ரத்னாலு' படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவீன் பாலிஷெட்டி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியான படம் ஜதி ரத்னாலு.  அனுதீப் கேவி இயக்கிய இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  அதன்பின் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் மனதை வென்றது.  இதற்கு முன் நவீன் பாலிஷெட்டி நடித்த ஏஜன்ஸி ஸ்ரீ்நிவாசா திரைப்படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது இயக்குனர் அனுதீப் கேவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ சிக்கலில் டான் படம்; சிவகார்த்திகேயன் படக்குழுவிற்கு அபராதம்

மெரீனா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகனாக வளர்ந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் ரிலீசாக தயாரான நிலையில் உள்ளது.  அறிமுக இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.  இந்த படத்திற்கு பிறகு அனுதீப் கேவி இயக்கத்தில் நடிப்பார் என்று திரைத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வகையில் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News