எமோஷனல் ஆன சிவகார்த்திகேயன், தந்தைக்காக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரல்

Sivakarthikeyan WhatsApp Status: நடிகர் சிவகார்த்திகேயன் அப்பாவின் 70வது பிறந்தநாளான இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து உருக்கமான பதிவு ஒன்று அவரது அட்மினால் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 27, 2023, 04:30 PM IST
  • மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி வெளியாகப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
  • நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் 70வது பிறந்த நாளையொட்டி உருக்கமான பதிவு.
  • சிவாவின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
எமோஷனல் ஆன சிவகார்த்திகேயன், தந்தைக்காக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரல் title=

நடிகர் சிவகார்த்திகேயன் அப்பாவின் 70வது பிறந்தநாள் இன்று: சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும்  தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அதன் பின்னர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது. அந்தவகையில் தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் இப்படி அணைவருக்கும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அப்பாவின் 70 பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த எமோஷனலான பதிவு அவரது அட்மினால் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் சிவகார்த்திகேயனின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் படிக்க | ரீல் வாழ்க்கையில் டூயட் பாடி ரியல் வாழ்க்கையில் ஜோடி சேர்ந்த ஜீவி-சைந்தவி !

"அப்பா.... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே'. நான் இன்றைக்கு என்ன செய்தாலும் அதற்குக் காரணம் நீங்கள்தான், எல்லாம் கற்றுத் தந்ததுதான். நீங்கள் வாழ்ந்த விதத்தைப் பார்த்துத்தான், நம் கையில் இருப்பதை வைத்து மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். உங்களுக்குப் பெருமை சேர்க்கும் மகனாக இருப்பேன். என்றென்றும் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள் அப்பா" என்று அதில் பதிவிடப்பட்டு உள்ளது. 

 

இதனிடையே தனது அப்பா மீது உள்ள உள்ள பிரியத்தின் காரணமாக தன்னுடைய மகனுக்கு குகன் தாஸ் என பெயர் வைத்திருக்கிறார். அண்மையில் குகன் தாஸ் நடப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சிவா சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். இந்தப்பதிவு அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை சிறைத்துறை அதிகாரியாக இருந்தார். அப்போது திருச்சி சிறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது மாரடைப்பில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  மேலும் தற்போது மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் வருகிற ஜூலை 14 ஆம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க | Jailer audio launch: ஜெய்லர் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News