ரசிகர்கள் அதிர்ச்சி! மாநாடு தள்ளி வைப்பு -தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திடீர் அறிவிப்பு

வியாழன் (நவம்பர் 25) அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் தள்ளிப்போனது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 24, 2021, 08:07 PM IST
ரசிகர்கள் அதிர்ச்சி! மாநாடு தள்ளி வைப்பு -தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திடீர் அறிவிப்பு title=

திரையரங்குகளுக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்கிற உத்தரவை அடுத்து, தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி (Suresh Kamatchi) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாநாடு" திரைப்படத்தை வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கி உள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah), எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜ (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாநாடு (Maanaadu) திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக வேண்டி இருந்தது. அதுக்குறித்து அப்பொழுது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கையில், நமது மாநாடு திரைப்படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. தீபாவளிக்கு வந்து பாப்போம் என்று இறங்கி விடலாம். ஆனால், என்னை நம்பி படம் வியாபாரம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப் படக்கூடாது. அதனால் மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி, நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.

 

ஆனால் சமீபத்தில் பள்ளிகூடம், திரையரங்கு (Cinema Theater), மார்க்கெட், கல்லூரிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணையும் பிறப்பித்துள்ளது.

ALSO READ | திரையரங்குகளுக்கு தடுப்பூசி கட்டாயம்: மாநாடு தயாரிப்பாளர் எதிர்ப்பு

இதனையடுத்து திரையரங்குகளுக்கு தடுப்பூசி கட்டாயம் (Corona Vaccination Certificate Must) என்கிற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து, தனது டுவிட்டரில் பதிவு ஒன்றையும் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டு இருந்தார். அதில் "உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "மாநாடு" திரைப்படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இது சிம்பு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மாநாடு படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதைக் குறித்து அவர் கூறியது, "நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார்.

ALSO READ |  STR இன் Maanaadu படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News