சித்தார்த்தை ஏமாற்றியது யார்; வைரலாகும் பதிவு

நடிகர் சித்தார்த்தின் இரண்டு பதிவுகளும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2021, 12:52 PM IST
சித்தார்த்தை ஏமாற்றியது யார்; வைரலாகும் பதிவு title=

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகர் சித்தார்த். முன்பு ஒரு நடிகர் சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்தார்கள். இவர்கள் இவருவம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நேரத்தில் காதல் முறிந்தது

இதற்கிடையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் சமந்தா (Samantha). அதன்படி தற்போது திருமணமாகி நான்கு ஆண்டுகளில் கணவரை பிரிந்துவிட்டார் நடிகை சமந்தா. இவர்கள் இருவரும் பிரிவது குறித்து நேற்று மாலை சமூக வலைதளத்தில் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா அதிகாரபூரவமாக அறிவித்தனர்.

sam

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து போனதை அறிவித்த சில மணிநேரத்தில் சித்தார்த் (Siddharth) ஒரு புதிய ட்விட் ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, (Social Media) பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று பதிவு செய்து இருந்தார்.

மற்றொரு பதிவில் அவர்., பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்று கூறியுள்ளார். தற்போது நடிகர் சித்தார்த்தின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் தற்போது யாரை குறிப்பிட்டு இந்த பதிவு செய்துள்ளார் என்று பெரும்பாலான ரசிகர்கள் யூகித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்.

 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News