உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 (Bigboss5) நிகழ்ச்சி 108 நாட்களை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரியங்கா, ராஜூ, பாவனி, நிரூப் மற்றும் அமீர் உள்ளிட்ட போட்டியாளர்கள் தற்போது ஃபைனலிஸ்ட் ஆக ஆகி உள்ளனர். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரதான டேக் ’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது தான்.
பிக்பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் எல்லா சவால்களையும் சந்தித்து வெற்றிபெறுபவர் யார் என்பது தெரியவில்லை. இந்த வீட்டில் வாரா வாரம் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தனர். இதற்கிடையில் இத்தனை நாட்களாக ஒட்டுமொத்த சீசனையும் தாங்கிப் பிடித்து வந்த பிரியங்காவுக்கு கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் பிரியங்காவுக்கு (Priyanka Deshpande) என்ன ஆச்சு என சந்தேகங்களை கிளப்பினர்.
ALSO READ | கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எபிசோடில் தெளிவாக பிரியங்காவுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் உடனடியாக ஷோவில் இருந்து வெளியேறினார். அவர் கன்பெக்ஷன் ரூம் வழியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல காட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பிரியங்கா உடல்நிலை குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா மீண்டும் வந்துவிட்டார் என்றும் அவர் வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பிரியங்கா கண்டிப்பாக பைனலில் பங்கேற்பார் என தெளிவாக இருக்கிறது. இந்த செய்தி வெளியான முதல் பிரியங்கா ரசிகர்கள் மிகுந்த குழியில் உள்ளனர்.
ALSO READ | கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க மாட்டோம்: தமிழக சுகாதாரத் துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR