ஷாருக்கான், மெக்காவுக்குச் சென்று வந்த உடன், வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்றார் என்று உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு எஸ்ஆர்கே சென்றதைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் வெளியாகி வைரலாகிறது. பாலிவுட் மெகாஸ்டார் ஷாருக்கான் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள புனிதத்தலமான வைஷ்ணோ தேவி அன்னையின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தியது பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. மெக்காவில் உம்ரா செய்துவிட்டு ஆசி பெறுவதற்காக ஷாருக்கான் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றுள்ளார். ஷாருக் ஸ்வெட்ஷர்ட் அணிந்து உள்ளே நுழையும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பல ட்விட்டர் ரசிகர் பக்கங்கள் இதைப் பகிர்ந்துள்ளன.
வைஷ்ணவ் தேவி ஆலயத்திற்கு நடந்து செல்லும் நடிகர் ஷாரூக்கானின் வீடியோவை இங்கே பாருங்கள்.
தெரியாதவர்களுக்காக, ஷாருக்கான் சவுதி அரேபியாவில் ராஜ்குமார் ஹிரானியின் டன்கி (Dunki) படப்பிடிப்புக்காக சென்றிருந்தார். அவர் அங்கு உம்ராவுக்காக மெக்கா சென்றார். பிரபல பாலிவுட்ட் நடிகரான ஷாரூக்கான் கான் சாதாரணமாய் வரிசையில் நின்று முகக்கவசம் அணிந்து உம்ரா சென்ற வீடியோக்கள் வைரலானது.
மேலும் படிக்க | 'அந்த’ விசயத்துக்கு மட்டுமில்ல! ‘உடல் பருமன்’ பிரச்சனையையும் தீர்க்கும் அத்திப்பழம்
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் முதன்முறையாக டன்கி படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். பதான், ஜவான் மற்றும் டன்கி ஆகிய மூன்று படங்கள் ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள். தனது மூன்று தசாப்த கால பாலிவுட் வாழ்க்கை மற்றும் எதிர் வரவிருக்கும் திரைப்படங்களின் முக்கியத்துவமும், அவரது இந்த மதத்தலங்களுக்கு சென்று வரும் விஷயமும் அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது.
57 வயதாகும் ஷாரூக்கான், அடுத்த சில ஆண்டுகளுக்கு அதிரடி படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் சக் தே இந்தியா நட்சத்திரம் டாம் குரூஸ் மற்றும் அவரது மிஷன் இம்பாசிபிள் தொடரால் ஈர்க்கப்பட்டவர், "நான் மிஷன் இம்பாசிபிள்-இஷ் வகையான திரைப்படங்களைச் செய்ய விரும்புகிறேன். நான் மிக உயர்ந்த வகையான ஆக்ஷன் படங்களைச் செய்ய விரும்புகிறேன்," என்று நடிகர் ஷாரூக்கான் தெரிவித்தார்.
மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிட்டதா? எப்படி தெரிந்து கொள்வது? அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ