சந்தானத்தின் DD Returns படம் எப்படி இருக்கு...? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

DD Returns Twitter Review: சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் வெளியாகியுள்ள DD Returns படத்திற்கு ட்விட்டரில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 28, 2023, 08:49 AM IST
  • இப்படத்தின் பிரஸ் ஷோ நேற்று சென்னையில் நடந்தது.
  • இப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.
  • ட்விட்டரில் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
சந்தானத்தின் DD Returns படம் எப்படி இருக்கு...? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!  title=

DD Returns Twitter Review: தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, திரைத்துறையிலும் தனக்கென தனி நகைச்சுவை பாணியை உருவாக்கி அதில் முத்திரை பதித்தவர், நடிகர் சந்தானம். லொல்லு சபா காலம் முதல் கடைசியாக வெளிவந்த அவரின் குளு குளு, ஏஜென்ட் கண்ணாயிரம் வரை சந்தானம் அவரின் தனித்துவத்தை மட்டும் விடவேயில்லை.

தற்போது நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி கதை நாயகனாக கடந்த சில ஆண்டுகளாக பல படங்களை நடித்து வருகிறார். இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, பாரிஸ் ஜெயராஜ் என ஓரிரு படங்களே அவருக்கு கைக்கொடுத்தன. மற்ற அனைத்தும் அவருக்கு சுமாரான வரவேற்பையே பெற்று தந்தது எனலாம். 

இருப்பினும், தொடர்ந்து கதைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்த சந்தானத்திற்கு தற்போது 'DD Returns' படம் மூலம் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தெரிகிறது. அவர் நாயகனாக நடித்துள்ள DD Returns திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இருப்பினும், நேற்றே சென்னையில் பிரஸ் ஷோ திரையிடப்பட்ட நிலையில், படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் நகைச்சுவைகள் அனைத்தும் டாப்-கிளாஸ் என படம் பார்த்த அனைவரும் அதனை கொண்டாடிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | தனுஷ் நடித்ததிலேயே ‘இந்த’ படங்கள்தான் டாப்..! உங்களுக்கு பிடித்த படம் லிஸ்டில் உள்ளதா..?

இதை தில்லுக்கு துட்டு முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கிய ராம்பாலா ஆகியோரின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோரும் நடித்துள்ளனர். DD Returns படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத புதுமையான ஹாரர்-காமெடி கதையாக வந்துள்ளதாகவும் பாராட்டப்படுகிறது. 

மேலும், DD Returns படத்திற்கு ட்விட்டரிலும் நல்ல வரவேற்பு உள்ளது. சந்தானத்தில் ஒரே மாதிரியான காமெடிகள் சலிப்பு தட்டிவிட்டதாக கூறிய பலரும், இன்று இப்படத்திற்கு 5 ஸ்டார் ரிவ்யூவை வழங்கி வருகின்றனர் எனலாம். சமீபத்தில் வெளியான குட் நைட், போர் தொழில் போன்ற சிறு பட்ஜெட் படங்களை போலவே DD Returns படமும் பெரும் வசூலை குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தை பார்த்த கார்த்திக் ரவி வர்மா என்பவர் ட்விட்டரில், DD Returns படம் நன்றாக இருப்பதாகவும், மொட்ட ராஜேந்திரன், கிங்ஸ்லி, பெப்சி விஜயன் ஆகியோர் அசத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் திரைப்பட விநியோகிஸ்தர் என ட்விட்டர் பயோவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பிரபல ஊடகவியலாளர் செய்யாறு பாலு அவரின் ட்விட்டர் பக்கத்தில்,"சைக்கோ சகதியில் கோடம்பாக்கத்தையே போட்டு புரட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் அடிவயிறு அல்சராகிவிடுமளவிற்கு ஒரு சிரிப்பு கூட்டணி தந்துள்ள படம்தான் DD Returns" என புகழ்ந்துள்ளார். 

DD Returns படத்துடன் ஹரிஷ் கல்யாண் நடித்த LGM, அஸ்வின் நடித்த Pizza 3, பரத் நடித்த Love உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளது. மேலும், தெலுங்கில் பவான் கல்யாண் நடிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் உருவான Bro படமும் இன்று தான் திரைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | 'காவலா’ பாடல் இந்தியில் ரிலீஸ்..! ஜெயிலர் பட விழாவிற்கு ’ஹாட்’ ஆக வந்த தமன்னா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News