சண்டகோழி-2 திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது!

சண்டகோழி-2 திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Sep 29, 2018, 05:49 PM IST
சண்டகோழி-2 திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியானது! title=

சண்டகோழி-2 திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சண்டக்கோழி. 

முதல் பாகத்தின் வெற்றிக்கு பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர். விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி மீண்டும் கைகோர்த்துள்ள இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதனை ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். 

இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் தற்போது முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முன்னதாக இப்படத்தின் முதல் ட்ரைலரினை படக்குழுவினர் கடந்த மே மாதம் வெளியிட்டனர்.

இத்திரைப்படமானது ஆயுதபூஜை வரவாக வரும் அக்டோபர் 18-ஆம் நாள் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Trending News