’சக்க போடு போடு ராஜா’: ட்ரைலர் மற்றும் இசை இன்று!

Last Updated : Oct 14, 2017, 12:26 PM IST
’சக்க போடு போடு ராஜா’: ட்ரைலர் மற்றும் இசை இன்று! title=

சந்தானம் நடிப்பில் வெளிவரும் ’சக்க போடு போடு ராஜா’திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இன்று வெளியாகவுள்ளது!

அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ’சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் இப்படத்தின் தயாரிக்கின்றார். ‘சர்வர் சுந்தரம்’ நாயகி வைபவி ஷாந்தாலியா சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். காமெடி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 

முன்னணி நடிகர்களின் படங்களில் இதுவரை காமெடி செய்துவந்த விவேக், இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி நடிகராக ஒப்பந்தம் ஆகியிருப்பது கோலிவுட் வட்டாரத்திலும், தமிழ் திரையுலக ரசிகர்களின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இன்று வெளியாகவுள்ளதாக நடிகர் சந்தானம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

Trending News