Sushanth மரண எதிரொலி: Mahesh Bhatt-ன் சடக்-2 பட ட்ரெய்லருக்கு 4.5 மில்லியன் Dis-likes!!

சடக்-2 படத்தின் ட்ரெய்லர், புதன்கிழமை வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த ட்ரெய்லர் You Tube-ல் மிகவும் விரும்பப்படாத வீடியோவாக (Most dis-liked Video) மாறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2020, 03:38 PM IST
  • திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் சடக்-2 படம் ஒரு சர்ச்சையின் மையத்தில் உள்ளது.
  • முதல் முறையாக தன் இளைய மகள் ஆலியா பட்டுடன் இணைந்து மகேஷ் பட் இப்படத்தை தயாரித்துள்ளர்.
  • படத்தின் ட்ரெய்லருக்கு யூட்யூபில் 4.5 மில்லியன் ‘டிஸ்லைக்குகள்’ கிடைத்துள்ளன.
Sushanth மரண எதிரொலி: Mahesh Bhatt-ன் சடக்-2 பட ட்ரெய்லருக்கு 4.5 மில்லியன் Dis-likes!!  title=

திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் சடக்-2 (Sadak-2) படம் ஒரு சர்ச்சையின் மையத்தில் உள்ளது. படம் இன்னும் வெளிவராத நிலையில், இப்போதே சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. முதல் முறையாக தன் இளைய மகள் ஆலியா பட்டுடன் (Alia Bhatt) இணைந்து மகேஷ் பட் (Mahesh Bhatt) இப்படத்தை தயாரித்துள்ளர்.

‘லைக்’ கிடைத்து புகழ்பெற்ற பல விஷயங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இது சற்று வேறுபட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் அனைத்து டிஸ்லைக் ரெகார்டுகளையும் முறியடித்து விட்டது.

இப்படத்தின் ட்ரெய்லர், புதன்கிழமை வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த ட்ரெய்லர் You Tube-ல் மிகவும் விரும்பப்படாத வீடியோவாக (Most dis-liked Video) மாறியுள்ளது.

இந்த ட்ரெய்லருக்கு யூட்யூபில் 4.5 மில்லியன் ‘டிஸ்லைக்குகள்’ கிடைத்துள்ளன. இந்த ட்ரெய்லர் வீடியோவை மொத்தம் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில் 2,55,000 பேர் மட்டுமே டிரெய்லரை ‘விரும்பியுள்ளனர்’.

ஜூன் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர்களால், யூடியூபில் இதை மிகவும் விரும்பப்படாத டிரெய்லராக உருவாக்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. சுஷாந்தின் ரசிகர்கள், அவரை பாலிவுட்டில் பலர் ஒதுக்கி வைத்தார்கள் என்றும், அவருக்கான வாய்ப்புகளை தட்டிப் பறித்தார்கள் என்றும், இதுதான அவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டியது என்றும் கூறி வருகின்றனர். டிரெய்லர் வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு மகேஷ் பட், தனது மூத்த மகள் பூஜா பட் மூலமாக ரசிகர்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டார். பூஜா பட்டும் (Pooja Bhatt) இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

"இன்று நாங்கள் எங்கள் பயணத்தின் கடைசி கட்டத்தைத் தொடங்குகிறோம். நான் தடையின்றி உணர்கிறேன்! எனக்கு எந்த சுமையும் இல்லை, என் மடியில் கனம் இல்லை. எட்டுவதற்கு எந்த இலக்கும் இல்லை. நிறைவேற்ற எந்த நோக்கமும் இல்லை. யாருக்கும் நிரூபிக்க வேண்டியது எதுவும் இல்லை. படம் ஓடினால் அது உங்கள் அனைவருக்கும் சொந்தமானதாகும்.  அவ்வாறு இல்லையென்றால், அது என்னுடையதாகும்” என்று அவர் அந்த செய்தியில் தெரிவித்தார்.

ALSO READ: 17 முறை மாற்றப்பட்ட சுஷாந்த் நிறுவனத்தின் IP முகவரி, பல முக்கிய தகவல்கள் வெளியீடு

சஞ்சய் தத் மற்றும் பூஜா நடித்து 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் தொடர்ச்சியான சடக் 2 ஆகஸ்ட் 28 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும். தயாரிப்பாளர் முகேஷ் பட், இப்படத்தை திரை அரங்குகளில்தான் வெளியிட இருந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இப்போது ஸ்ட்ரீமிங் தளத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறினார்.

சமீபத்தில் காலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் (Sushant Singh Rajput) மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாலிவுட் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விட்டது என்றே கூறலாம். பாலிவுட்டின் பல சக்திவாய்ந்த நபர்கள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் மகேஷ் பட்டின் பெயரும் அடிபடும் நிலையில், இப்போது அவர் தனது சடக்-2 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளதால் பெரும்பாலான ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர். அந்த கோவத்தை ட்ரெய்லரை டிஸ்லைக் செய்து காண்பித்து வருகின்றனர்.  

ALSO READ: Sushant case: ரியா சக்ரவர்த்தியின் சகோதரரை 18 மணி நேரம் ED விசாரசனை..அடுத்தது என்ன?

Trending News