தமிழ் திரையிலகில் பிரபலமாக இருக்கும் வட இந்திய நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவருக்கு, ஒரு பாலிவுட் நடிகருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் அந்த நடிகர்? திருமணம் எப்போது? இங்கு பார்க்கலாம்.
ரகுல் ப்ரீத் சிங்:
கன்னட மொழியில் வெளியான ‘கில்லி’ படத்தின் மூலம் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தவர், ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி என மும்மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படம், ‘தடையற தாக்க’. இந்த படத்தில் அவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார், ரகுல்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வந்த இவர், குறும்புத்தனமான பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. ரகுலின் சினிமா வாழ்க்கை கடந்த 5 ஆண்டுகளாக முன்னேற்றத்தில் உள்ளது. தமிழ் மட்டுமன்றி இந்தியிலும் அக்ஷய் குமார், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெரிய நடிர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2023ஆம் ஆண்டில் இவர் நடித்த சத்ரிவாலி, பூ, ஐ லவ் யூ உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
திருமணம்..
ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி பகானியை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரகுல் மற்றும் ஜாக்கி ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும், தங்களது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி ஒன்றாக போட்டோ எடுத்து காதல் கேப்ஷன்களுடன் பதிவிடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், இருவரும் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா? வெளியானது அப்டேட்!
திருமணம் நடைபெற இருப்பது எங்கே?
பாலிவுட் ஜோடிகள் மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலர் கடந்த ஆண்டு தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமண சீசன், அடுத்த ஆண்டும் தொடர உள்ளது. ரகுல்-ஜாக்கியின் திருமணம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம், வட இந்தியாவில் உள்ள ஒரு மாளிகையில் நடைபெற உள்ளதாகவும், இதில் இரு வீட்டிாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காதலர் குறித்து ரகுல்..
ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பகானி குறித்து சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது, தாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், கொரோனா ஊரடங்கின் போது இருவரும் நெருக்கமாக பழகியதாகவும் தெரிவித்தார். இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
ரகுலின் அடுத்தடுத்த படங்கள்..
ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம், வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. அதே போல, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்திலும் ரகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம், வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் - நடிகர் விஷால்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ