ரஜினி பட தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை..! அதிர்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள்..!

ரஜினிகாந்த்தின் பட தயாரிப்பாளர் ஒருவர், 6 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

Written by - Yuvashree | Last Updated : Aug 11, 2023, 07:41 AM IST
  • ரஜினிகாந்த நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் கோச்சடையான்.
  • இதன் தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி பட தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை..! அதிர்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள்..!  title=

ரஜினிகாந்த்தின் பட தயாரிப்பாளர் ஒருவர், 6 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த செய்தி கோலிவுட் பிரபலங்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோச்சடையான் தயாரிப்பாளர்:

ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான படம், ‘கோச்சடையான்’. இந்த படத்தில் தீபிகா படுகோன் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சுனில் லுல்லா, முரளி மனோகர் மற்றும் பிராஷிட்டா சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இதில், முரளி மனோகர் மீது சில நாட்களுக்கு முன்பு பண  மோசடி வழக்கு தொடரப்பட்டது. தற்போது அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

என்ன நடந்தது..? 

9 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் அனிமேஷன் வடிவில் 3 டி தொழில் நுட்பத்தில் உருவாகியிருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான முரளி மனோகர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் முதலீடு செய்திருந்தார். ‘கோச்சடையான்’ படத்திற்கு ஒரு தனியார் நிறுவனம் அனிமேஷன் பணிகளை செய்து கொடுத்துள்ளது. முரளி மனோகர் படத்தின் 20 சதவிகித உரிமையும், 12 சதவீதம் கமிஷனையும் அந்த நிறுவனத்திற்கு தருவதாக உறுதியளித்துள்ளார். இதற்காக 2014ஆம் ஆண்டு அவர் கொடுத்த 5 கோடிக்கான காசோலை செல்லாமல் போயுள்ளது. இதனால், அந்த தனியார் அனிமேஷன் நிறுவனம் முரளி மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

சர்ச்சைகள்:

கோச்சடையான் படத்தை  தயாரிக்க ஆட்பீரோ என்ற  நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடன் அடைக்காமல் அவர் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆடட் பீரோ நிறுவனம் பலமுறை முயற்சித்தும் கடன் செலுத்த ரஜினிகாந்த் தரப்பினர் முன்வராததால்,  ஆட்பீரோ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இது போல கோச்சடையான் படம் ரிலீஸாவதற்கு முன்னரும் அதன் பிறகும் பலவிதமான சர்ச்சைகள் பரவின.

6 மாதம் சிறை:

தனியார் அனிமேஷன் நிறுவனம் தொடர்ந்திருந்த அந்த வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது, இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தி கோலிவுட் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

படக்குழு:

கோச்சடையான் படத்தின் கதையை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் எழுதியிருந்தார். ரஜினியின் மகளே இந்த படத்தை இயக்கியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. கிராஃபிக்ஸ் பணிகள், பட ப்ரமோஷன்கள், படக்குழு என படத்திற்கு எக்கச்சக்கமாக செலவு செய்யப்பட்டது. படத்தில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சரத்குமார், ஆதி உள்ளிட்டோரும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக இடம் பெற்றிருந்தனர். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 

மேலும் படிக்க | கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News