நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்திறமையோடு தமிழ் திரையுலகில் பிரபலமாக இருப்பவர் ராகவா லாரன்ஸ். திகில் படங்களுக்கு பெயர் போனவர் இவர் என்றே சொல்லலாம், இவரது நடிப்பில் வெளியான பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ருத்ரன்' படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாராட்டை பெற்று வருகிறது. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார். தற்போது ராகவா லாரன்ஸ் முதன்முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளார், இந்த செய்தியினை அவரே உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் படிக்க | பழைய வீடியோவை பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்...
தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் 'மேயாத மான்' மற்றும் 'குளு குளு' போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லாரன்ஸ் நடிக்கும் ஹாரர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராகவா லாரன்ஸை வைத்து ரத்னகுமார் இயக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் லோகேஷ். லோகேஷ் கனகராஜுடன் தான் முதன்முறையாக இணையவுள்ள செய்தியினை நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டியொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக என்னால் அந்த படத்தில் நடிக்கமுடியாமல் போனது. ஆனால் இப்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். சென்னையில் படுவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் ரஜினியை வைத்து இயக்க உள்ளார் என்று செய்தி பரவலாக உள்ளது. ஆனாலும், கைதி 2 தான் லோகேஷின் அடுத்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மாரி செல்வராஜ் படத்தில் தனுஷ் உடன் முதன் முறையாக இணையும் நடிகர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ