வெளியானது "பியார் பிரேமா காதல்" படத்தின் மோஷன் போஸ்டர்!

காதலர் தினத்தையொட்டி பிக் பாஸ் காதல் ஜோடி ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் உருவாகும் பியார் பிரேமா காதல் படத்தின் அதிகாரப்பூர்வமான புதிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

Last Updated : Feb 10, 2018, 09:09 AM IST
வெளியானது "பியார் பிரேமா காதல்" படத்தின் மோஷன் போஸ்டர்! title=

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.

அதேநேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். 

ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் மற்றொரு போஸ்டர் புத்தாண்டு ஸ்பெஷலாக படக்குழு வெளியிட்டது. 

இதையடுத்து, காதலர் தினத்தையொட்டி இன்று பியார் பிரேமா காதல் படத்தில் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது அது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 

Trending News