‘உங்க பிரா சைஸ் என்ன..?’ ரசிகர் கேட்ட கேள்விக்கு செருப்படி ரிப்ளை கொடுத்த பிரபல நடிகை..!

Priya Bhavani Shankar: பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்தரங்கமான கேள்வி கேட்ட ஒருவருக்கு செருப்படி கொடுப்பது போல கொடுத்திருக்கும் ஒரு பதில் தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 15, 2023, 02:14 PM IST
  • பத்துதல பட நாயகி பிரியா பவானி சங்கர்.
  • இன்ஸ்டாவில் ஒரு ரசிகர் அந்தரங்கமாக இவரிடம் கேள்வி கேட்டுள்ளார்.
  • இதற்கு பயங்கர ரிப்ளை கொடுத்துள்ளார் பிரியா.
‘உங்க பிரா சைஸ் என்ன..?’ ரசிகர் கேட்ட கேள்விக்கு செருப்படி ரிப்ளை கொடுத்த பிரபல நடிகை..! title=

டிவி செய்தி தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டில் நடிகையாக மாறியிருப்பவர், பிரியா பவானி சங்கர். ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக திரைக்குமுன் முகத்தை காண்பித்த இவர், தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்படும் கதாநாயகிகளுள் ஒருவராக உள்ளார். இவர், தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்டிருந்த பதிவில் அநாகரிகமாக பேசிய ஒரு ரசிகருக்கு தரமான பதில் கொடுத்திருப்பது நெட்டிசன்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

பிரியா பவானி சங்கர்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். அந்த தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் போதே படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதால் அதிலிருந்து விலகிக்கொண்டார். பின்னர், இவருக்கு பதிலாக சைத்ரா ரெட்டி நடித்திருந்தார். பிரியா, ‘மேயாத மான்’ படம் மூலம் திரையுலகிற்குள் வந்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இவருக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் இருந்ததோ, இவர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தவுடன் அந்த ரசிகர்கள் கூட்டம் அப்படியே பெருகி விட்டது. இப்போது பல பிரபலமான ஹீரோக்களுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். 

மேலும் படிக்க | உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதா ‘மாவீரன்’ திரைப்படம்..?

இன்ஸ்டா பதிவு..

அனைத்து நாயகிகளையும் போலவே, பிரியா பவானி சங்கரும் அடிக்கடி தனது சமூக வலைதளப்பக்கத்தை அப்டேட் செய்து கொண்டே இருப்பார். அவ்வப்போது போட்டோக்கள் அல்லது வீடியோக்கள் வெளியிடுவது, தான் நடிக்கும் படங்கள் குறித்து போஸ்ட் செய்வது என்றவாறு தன் இன்ஸ்டா பக்கத்தை இவர் உபயோகித்து வந்தார். இந்த நிலையில், தனது ஸ்டோரி செக்ஷனில் சில நாட்களுக்கு முன்னர் “ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்..” என்ற ஸ்டிக்கர் ஆப்ஷனுடன் பதிவிட்டிருந்தார். இதில் வந்த கேள்விகளுக்கும் அவர் பதில் கொடுத்திருந்தார்.

கேவலமான கேள்வி கேட்ட ரசிகர்-பிரியாவின் ரிப்ளை..

அந்த கேள்வி-பதில் ஸ்டிக்கரில் ஒரு ரசிகர் இவரிடம் “உங்கள் உள்ளாடையின் (Bra) சைஸ் என்ன..?” என்று கேட்டுள்ளார். அதற்கு அஞ்சாமல் பதிலளித்துள்ளார் பிரியா. “எனக்கு சைஸ் 34டி. என் மார்பகத்தை நான் ஒன்றும் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கு கூட மார்பகம் உள்ளது. நீங்கள் அவர்களது டி-சர்டுகளையும் உற்று நோக்குவீர்கள் என்று நினைக்கிறேன்..” என்று அந்த ரசிகரின் முகத்தில் ‘சப்’பென்று செருப்பை வைத்து அறைந்தது போல பதலளித்துள்ளார் பிரியா. இவரது இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது. 

பிரியாவின் அடுத்தடுத்த படங்கள்..

பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தை அடுத்து கார்த்திக்கு அத்தை மகளாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவருக்கு துணைக்கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. மான்ஸ்டர், மாஃபியா, யானை, திருச்சிற்றம்பலம் என வரிசையாக பல ஹீரோக்களின் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘பத்து தல’ படம் வெளியாகியிருந்தது. இவர் நடிப்பில் அடுத்து டிமாண்டி காலனி 2, ஜீப்ரா, இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன. 

மேலும் படிக்க | பட வாய்ப்புக்காக பிரபல நடிகையை படுக்கறைக்கு அழைத்த இயக்குநர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News