'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ப்ராஜெக்ட் கே' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ப்ராஜெக்ட் கே' எனும் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது படமாக்கப்பட்ட காணொளியின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2023, 04:29 PM IST
  • ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் புத்தம் புதிய அப்டேட் ட்ரெண்டாகி வருகிறது.
  • இயக்குநர் நாக அஸ்வின் மற்றும் நடிகர் பிரபாஸ் முதல் முறையாக இணைகின்றனர்.
  • சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ப்ராஜெக்ட் கே' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு title=

படைப்புத்திறன் மிகு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே'. 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை தனித்துவமான பாணியில் விளம்பரப்படுத்த திட்டமிட்ட படக் குழுவினர், இதன் ஒரு பகுதியாக 'ஃபிரம் ஸ்க்ராட்ச்' எனும் பெயரில் படத்தின் முன் தயாரிப்பு பணிகளின் காணொளியை வெளியிட்டனர்.

இந்த காணொளியின் முதல் பாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது குறித்த பல விசயங்கள் இடம் பிடித்திருந்தது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனையடுத்து படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் காணொளியின் இரண்டாவது பாகத்தில், 'அசம்பிளிங் தி ரைடர்ஸ்' என்ற பெயரில் எதிர் நாயகனுக்குரிய சீருடை பட்டாளம் பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இது இந்தத் திரைப்படத்தின் விலை உயர்ந்த பகுதி என தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டாப் சைக்கோ த்ரில்லர் படங்களின் லிஸ்ட்

இயக்குநர் நாக் அஸ்வின் திரைக்கதையில் சிறப்பான கவனத்தை செலுத்தி, உலக தரத்திலான படைப்பாக 'ப்ராஜெக்ட் கே' வை உருவாக்கி வருகிறார். தொழில்நுட்ப ரீதியில் இந்த 'ப்ராஜெக்ட் கே' திரைப்படம் அனைவராலும் பேசப்படும் படைப்பாக இருக்கும். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால்.. பொன்விழா படைப்பாக 'ப்ராஜெக்ட் கே' வைத் தயாரித்து வருகிறது. 

வைஜெயந்தி மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். 'பிக் பி' என செல்லமாக போற்றப்படும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். அத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜோடியாக அறிமுகமாகும் அமீர் - பாவ்னி! இயக்குனர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News