இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் பொன்னியின் செல்வன்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் பான் - இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளது. லைக்காவுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் மணிரத்னத்தின் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் இதற்கு வசனம் எழுதியுள்ளார்.
இப்படம் திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் உலாவந்தது. ஆனால் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் படக்குழு உறுதியாக இருந்தது. அந்த வகையில் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க | விஜய்க்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாமாம்- காரணம் என்னனு பாருங்க!
இந்நிலையில், இப்படத்தின் தியேட்டர் ரிலீசுக்குப் பின்பான ஓடிடி உரிமை தொடர்பாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இரு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.125 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாம்.
மேலும் படிக்க | திடீரென ட்ரெண்டாகும் ஷாருக்கானின் மும்பை இல்லம்- காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR