பிரபல துணை நடிகர் திடீர் மரணம்..அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாத அவலம்..!

தனுஷின் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்த பிரபு என்ற நடிகர் திடீரென காலமானார். இந்த நிலையில் அவரை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் இசையமைப்பாளர் டி.இமான் அந்த பொருப்பை ஏற்றுக்கொண்டார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2023, 03:14 PM IST
  • பொல்லாதவன் படத்தில் நடித்தவர், பிரபு.
  • இவருக்கு புற்றுநோய் இருந்தது.
  • உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.
பிரபல துணை நடிகர் திடீர் மரணம்..அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாத அவலம்..!  title=

சினிமாவில் துணை நடிகராக வலம் வந்தவர், பிரபு. இவர், இதுவரை தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். 

தனுஷ் பட நடிகர்: 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம், பொல்லாதவன். இந்த படம், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியானது. இதில் கருணாஸ், சந்தானம், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரபு நடித்திருப்பார். 

புற்றுநோய் பாதிப்பு: 

நடிகர் பிரபு, கடந்த சில நாட்களாகவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்த இவர் இப்படியொரு நிலையில் இருப்பது வெளியுலகிற்கு பெரிதும் தெரியாமலே போனது. நிதிப்பிரச்சனை காரணமாக புற்றுநோய்க்கு ஏற்ற சிகிச்சையை இவரால் எடுத்துக்கொள்ள முடியாமல் போனது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இவரது நிலைமையை அறிந்து இவருக்கு உதவி செய்துவந்தார். 

மேலும் படிக்க | முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர்: படம் ஹிட் கன்பார்ம்

உயிரிழப்பு:

ஏற்கனவே உடல் நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரபு, திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, இவருக்கு இறுதி மரியாதை செய்யக்கூட யாரும் வராத நிலை ஏற்பட்டது. 

உடல் தகனம்: 

துணை நடிகர் பிரபுவைத்தேடி யாரும் வராத நிலையில் அவரது உடல் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதையடுத்து, நடிகர் பிரபுவிற்கு உதவி செய்து வந்த டி.இமானே அவருக்கு இறுதி மரியாதையும் செய்தார். பிரபுவின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

துணை நடிகர்களுக்கு ஏன் இந்த அவல நிலை..

தமிழ்சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களின் மீது மட்டுமே அதிகம் கவனம் செலுத்தும் ரசிகர்கள், துணை கதாப்பாத்திரங்களை எளிதில் மறந்துவிடுவது போல, துணை நடிகர்களையும் மறந்துவிடுகிறார்கள். பிரபல வில்லன் நடிகராக இருந்த பொன்னம்பலம் சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதை கவனிக்கவாே சிகிச்சைக்கோ தன்னிடம் பணம் இல்லை என்றும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு அப்போலோ மருத்துவமனையின் சார்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான செலவை சிரஞ்சீவி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்திருந்தவர், வைரவன். இவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார். அதன்பிறகுதான் பல நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். இப்படி துணை கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்கள் பலர் உடல் நிலை சரியில்லாமல் போகும் போது அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள கூட கையில் பணம் இல்லாமல் இருக்கும் நிலை மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | ‘மாமன்னன்’ டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியானது அட்டகாசமான அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News