திரைப்படமாகும் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு!

Last Updated : Jun 8, 2017, 09:08 AM IST
திரைப்படமாகும் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு! title=

முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது.

அதனை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார். அதில் பிரபல நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங்காக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர்:-

சமகால வரலாற்று கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மிகவும் சவாலானது என்று குறிப்பிட்டார். நான் தொடக்கம் முதலே வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். மன்மோகன் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதை மிகவும் சுவாரசியமாக உணர்வதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி, வைரலாகி வருகிறது.

Trending News