வசனம் இல்லாமல் மிரட்டும் ஆண்ட்ரியா - வெளியானது பிசாசு 2 டீசர்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு 2 படத்தின் டீசர் வெளியானது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 29, 2022, 06:21 PM IST
  • பிசாசு 2 டீசர் வெளியானது
  • வசனங்கள் இல்லாமல் வெளியானது டீசர்
  • ஆண்ட்ரியா வசனமே இல்லாமல் மிரட்டுகிறார்
வசனம் இல்லாமல் மிரட்டும் ஆண்ட்ரியா - வெளியானது பிசாசு 2 டீசர் title=

மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் வழக்கமான பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது. அதன் காரணமாக அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வெற்றி பெற செய்தனர்.

இதனையடுத்து அவர் தற்போது பிசாசு 2 படத்தை எடுத்திருக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

Vijay Sethupathi

நீண்ட நாள்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

மேலும் படிக்க | ஆச்சார்யா படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

இதற்கிடையே இந்தப் படத்தில் இயக்குநரின் கட்டாயத்தின் பேரிலேயே நிர்வாணமாக நடித்ததாக ஆண்ட்ரியா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Pisasu 2

இந்நிலையில் பிசாசு 2 படத்தின் டீசர் இன்று வெளியானது. பேய் படங்களுக்கே உரிய திகில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மிஷ்கின் விஷுவல் ரீதியாக நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என டீசரை பார்க்கும்போது தெரிகிறது. 

 

பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ள இந்த டீசரில் வசனங்கள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் அதை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | விஜய் சேதுபதியுடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News