அஜித்-ரஜினிக்கு பாடல் எழுத யார் காரணம்? பிச்சைக்காரன் 2 பாடலாசிரியர் அருண் பாரதி பளிச் பேட்டி!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன்-2 படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த பாடல்களை எழுதிய அருண்பாரதி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : May 17, 2023, 12:59 PM IST
  • விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன்-2 படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின.
  • இதன் பாடலாசிரியர், அருண் பாரதி.
  • அருண் பாரதி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அஜித்-ரஜினிக்கு பாடல் எழுத யார் காரணம்? பிச்சைக்காரன் 2 பாடலாசிரியர் அருண் பாரதி பளிச் பேட்டி! title=
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன்-2 படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த பாடல்களும், அதில் இடம் பெற்றுள்ள வரிகளும் ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளை பெற்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பாராட்டுக்கெல்லாம் சொந்தக்காரர், அருண் பாரதி. 
 
பாடலாசிரியர் அருண்பாரதி:
 
ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி அந்த பாடல்களின் மூலம் பலரது மனங்களை வருடியவர் அருண் பாரதி. விரைவில் வெளியாகவுள்ள பிச்சைக்காரன்-2 படத்தில் கோயில்சிலையே என்ற உணர்வு பூர்வமான பாட்டை படைத்து அனைவரையும் ஈர்த்துள்ளார். இவர், விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் அப்பபாடல் மூலம் தனக்கு கிடைத்த பாராட்டு குறித்தும் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். 
 
விஜய் ஆண்டனி குறித்து அருண்பாரதி..
 
அருண் பாரதியிடம் விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பணியாற்றும் அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனது பாட்டுப்பயணத்தில் நிறைய வேகத் தடைகள் இல்லாமல் இலகுவாக நான் பயணம் செய்வதற்கான அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் விஜய்ஆண்டனிதான். தொடர்ந்து அவரோடு நான் பயணிப்பதால் என்ன மாதிரியான வரிகளை அவருக்கு எழுத வேண்டும் என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன். நான் என்ன மாதிரி எழுதுவேன் என்பதை அவரும் தெரிந்து வைத்திருக்கிற காரணத்தினால் எங்கள் பயணம் எளிமையாக இருப்பதாக கருதுகிறேன்” என்றார். 
 
கவனம் ஈர்க்கும் பாடலாசிரியர்..
 
சமீப காலங்களில் கவனிக்க கூடிய பாடலாசிரியராக இருப்பவர் அருண் பாரதி. இந்தப் பணி அவருக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,  “மிகவும் நிறைவாக இருக்கிறது. வணிக ரீதியிலான வெற்றிப் பாடல்களை கொடுக்கும் அதே நேரம், உணர்வு ரீதியிலான உறவுகளை எடுத்து சொல்லும் கதைக்களம் சார்ந்த பாடல்கள் எல்லா பாடலாசிரியர்களுக்கும் அமைந்து விடாது. அந்த வகையில் எனக்கு அது அமைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி” என்று பதிலளித்தார்.
 
“பிச்சைக்காரன் 2 படத்தில் 3 பாடல்கள் எழுதியிருக்கிறேன்..”
 
கேள்வி: பிச்சைக்காரன்2 படத்தில் பாடல் எழுதிய அனுபவம் எப்படி இருந்தது? அருண்பாரதியின் பதில்: வழக்கமாக விஜய்ஆண்டனி அவர்களுக்கு எழுதுவதை விட, இந்தப் படம் கூடுதல் உழைப்பை எடுத்துக் கொண்டது. அதற்கு காரணம் எந்த சமரசமும் இல்லாமல் பணியாற்றியதுதான். கோயில் சிலையே பாடல் அண்ணன் தங்கைகளுக்கான ஒரு ஆன்தம் ஆக அமைந்திருக்கிறது. நானா புலுக்கு பாடல் கமர்ஷியலாக மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. கள்ளூறும் பூவே என்ற மெல்லிசை பாடலும் அற்புதமாக வந்திருக்கிறது. மொத்தம் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன்.
 
“இயக்குநர் சிவாதான் காரணம்..”
 
கேள்வி: குறுகிய காலத்தில் அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுக்கு பாடல் எழுதியிருக்கிறீர்கள்? எப்படி சாத்தியமானது ?
 
பாரதியின் பதில்: அஜித், ரஜினி இருவருக்குமே நான் பாடல் எழுதியதற்கு இயக்குநர் சிவா சார் மிக முக்கியமான காரணம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைதான் என் வாழ்வின் புதிய பக்கத்தை திறந்து வைத்தது. அவரது படங்கள் எல்லாமே படு மாஸாக இருக்கும். ஆனால் அவரோடு பழகிப் பார்த்தால் ஒரு குழந்தை போல இருப்பார்.  அவரோடு பாடல் எழுதுவது கல்லூரிக்கு சென்று வருவது போல உற்சாகமாக இருக்கும். இந்த நேரத்தில் இசையமைப்பாளர் இமான் அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.    
 
 
அருண் பாரதியின் மறக்க முடியாத பாராட்டு..
 
சமீபத்தில் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அருண், “சிறு வயதிலேயே தன் தங்கையை இழந்த முகம் தெரியாத ஒரு அண்ணன் கோயில்சிலையே பாடலை பார்த்து விட்டு, என்னை பார்த்தே ஆக வேண்டும் என என் வீடு தேடி வந்து  கட்டியணைக்கையில் என் தோள்களில் சிந்திய கண்ணீர் துளிதான் சமீபத்தில் எனக்கு கிடைத்த ஆகச்சிறந்த பாராட்டு” என்று நெகிழ்ச்சி ததும்ப கூறினார். 
 
ஆல்பம் பாடல்களிலும் கவனம்?
 
கேள்வி:  திரைப்பாடல்களை போலவே ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறீர்கள் போலவே?? 
பதில்: என்னைப் பொறுத்த வரை எல்லா பாடல்களையும் சமமாகத்தான் பார்க்கிறேன். திரைப்பாடல் என்பது ஒரு சுவாரஸ்யமான நாவலில் தேவைப்படும் சூழலில் அந்த கதாபாத்திரங்களுக்காக எழுதுவது போல இருக்கும். ஆல்பம் பாடல் என்பது ஒரு சிறுகதைக்குள் சென்று எழுதுவது போல இருக்கும். சமீபத்தில் எனது “பொண்ணு பாக்க போறோம்”, “ஒரு சக்கரம் போலத்தான்” பார்வை போன்ற ஆல்பம் பாடல்கள் இந்த வகையை சேர்ந்ததுதான். திரைபாடல்களோடு சேர்ந்து தற்போது நிறைய ஆல்பம் பாடல்களும் எழுதி வருகிறேன்.
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News