வட இந்தியாவின் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர், நிதீஷ் பாண்டே. சீரியல் மட்டுமன்றி, சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்தி நடிகர்:
இந்தியில் பிரபலமாக விளங்கும் தொடர், அனுபமா. இந்த தொடரில் தீரஜ் கபூர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நிதீஷ் பாண்டே. இந்த தொடரில் இவரது கேரக்டருக்காகவும் நடிப்புக்காகவும் பிரபலடைந்தார். இதற்காக இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளும் குவிந்தது. இந்நிலையில் 51 வயது நிரம்பிய நிதீஷ் பாண்டே தான் தங்கியிருந்த ஓட்டல் அறையிலேயே இன்று இறந்து கிடந்துள்ளார்.
இறப்பிற்கான காரணம் என்ன?
நடிகர் நிதீஷ் பாண்டே, பணி நிமித்தமாக நாசிக் மகாராஷ்டிராவில் உள்ள இகட்புரி எனும் இடத்தில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் அந்த ஓட்டல் அறையிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து இன்னும் எதுவும் கூறப்படாத நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. நிதீஷ் பாண்டேவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணை..
நிதீஷ் பாண்டேவின் மரணத்தை பொருத்த வரை, தகுந்த மருத்துவ அறிக்கைகள் வெளியாகும் வரை எதையும் உறுதியாக கூற முடியாது என போலீஸார் தெரிவித்துள்ளனர். தங்கும் விடுதியில் வேலை செய்யும் ஊழியர்களையும் நடிகருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நடிகரின் இறப்பு குறித்த தீவிர விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
ரசிகர்கள் இரங்கல்:
அனுபமா தொடருக்கு இந்தி திரையுலகில் பயங்கர வரவேற்ப்பு உள்ளது. இதனாலேயே, உயிரிழந்த நிதீஷ் பாண்டேவிற்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர்கள், இவரது இறப்பு செய்தியை கேட்டவுடன் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் பதிவினை கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள், திரையுலகில் ஏதோ தப்பாக உள்ளது என்றும் சமீப காலங்களில் பலர் மாரடைப்பால் உயிரிழந்து வருவதாகவும் சந்தேக பதிவை வெளியிட்டு வருகின்றனர்,
பாலிவுட்டை துரத்தும் சோகம்!
பாலிவுட் நடிகர்கள் பலர், கடந்த 10 ஆண்டுகளில் மர்மமான முறையில் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், துனிஷா சர்மா எனும் இளம் சீரியல் நடிகை உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இது கொலையாகவும் இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகித்தனர். சில வருடங்களுக்கு முன் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணமடைந்தார். தூக்கிட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தாலும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இன்றளவும் நம்பப்படுகிறது. பிரபல சீரியல் நடிகர் சித்தார்த் சுக்லா, 40 வயதிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நேற்று சபக் படத்தில் நடித்து பிரபலமான வைபவி உபாத்யாய் சாலை விபத்தில் பலியானார். இப்படி பாலிவுட்டின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பல நடிகர்-நடிகைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ