விடாது துரத்தும் Beast Vs KGF2: என்ன சொல்கிறார் நெல்சன்?

விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப்-2 ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன.

Last Updated : Mar 29, 2022, 04:30 PM IST
  • பீஸ்ட் ,கேஜிஎஃப்-2 ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன.
  • கேஜிஎஃப்-2 குறித்து இயக்குநர் நெல்சன் கருத்து
  • முன்னதாக பீஸ்ட் குறித்து நடிகர் யஷ் பேசியிருந்தார்
விடாது துரத்தும் Beast Vs KGF2: என்ன சொல்கிறார் நெல்சன்? title=

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கு மறுநாளான 14ஆம் தேதி, யஷ் நடித்துள்ள கேஜிஎஃப்- 2 ரிலீசாகவுள்ளது. கே.ஜி.எஃப் முதல் பாகம் பெரும் கவனத்தைப் பெற்றதால் அப்படத்துக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல விஜய்யின் பீஸ்ட்டும் தமிழ் மட்டுமல்லாது இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால் இதற்கும் இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனால் இருதரப்பு ரசிகர்களும் சோசியல் மீடியாவில் வார்த்தைப் போர் நடத்திவருகின்றனர். இதனிடையே கேஜிஎஃப்-2 ட்ரெய்லர் விழாவில் பேசிய நடிகர் யஷ், சீனியர் நடிகரான விஜய் மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும் பீஸ்ட்டுக்கு போட்டியாக தனது படம் வெளியிடப்படவில்லை எனவும் கூறினார். பீஸ்ட் படத்தைத் தானும் தியேட்டருக்குச் சென்று பார்க்கவுள்ளதாக கூறி அன்பு மழை பொழிந்த யஷ், ரசிகர்களின் இணைய யுத்தத்தை சற்றே ‘கூல்’ செய்தார்.

 

மேலும் படிக்க | பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!

அதேநேரம் பீஸ்ட் படத் தரப்பிலிருந்து கேஜிஎஃப்- 2 தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் அப்படம் குறித்து வாய் திறந்துள்ளார் பீஸ்ட் இயக்குநர் நெல்சன். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கேஜிஎஃப்-2 ட்ரெய்லரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அப்படத்துக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறிய அவர், யஷ் உள்ளிட்ட படக்குழுவையும் அதில் டாக் செய்திருந்தார். 

It’s massive and lit can’t wait #KGFChapter2Trailer @prashanth_neel @TheNameIsYash @hombalefilms @anbariv https://t.co/nZwPlm4HaJ

இதைத் தொடர்ந்து நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ள கேஜிஎஃப்-2  இயக்குநர் பிரசாந்த் நீல், பதிலுக்கு பீஸ்ட் படத்துக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். விஜய்யைத் திரையில் காண தான் ஆவலாக உள்ளதாகவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News