குளியல் அறையே 1500 சதுர அடி... விக்னேஷ் சிவனுக்காக பார்த்து பார்த்து வீடு கட்டும் நயன்தாரா!

தென் இந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா சுப்பர் ஸ்டார் வீட்டின் அருகிலேயே வீடு ஒன்றை கட்டி வருகிறாராம்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 8, 2022, 06:11 PM IST
  • தனது திருமண கவரேஜ்ஜையே இயக்குநர் கௌதம் மேனனிடம் ஒப்படைத்து புதுவித டாக்குமெண்டரியை தயாரித்துள்ளார்
  • நயன்தாரா கட்டும் வீடுதான் அனைவரின் வாயையும் அசைபோட வைத்துள்ளது.
குளியல் அறையே 1500 சதுர அடி... விக்னேஷ் சிவனுக்காக பார்த்து பார்த்து வீடு கட்டும் நயன்தாரா!  title=

தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக இந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டி தரவுள்ளாராம் நயன்தாரா. இதற்காக சென்னை போயஸ் கார்டனில் பல கோடி ரூபாயிலான கட்டுமான பணிகளும், மெருகேற்றும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்தியாவின் கனவு கன்னியாக முடிசூட்டா சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் நயன்தாரா. இவர் தற்போது ஹிந்தி மொழியில் ஜவான் என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கும் இந்த படத்தில் நடிக்கத்தொடங்கியதுமே நயன்தாரா தனது பலநாள் காதன் ஆன விக்னேஷ் சிவனை திருமண செய்துக்கொண்டார். மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் என யாரும் செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என கடும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இதுதான்!

Vignesh shivan - nayanthara

இது ஏன் என்றால் நயன்தாரா தனது திருமண கவரேஜ்ஜையே இயக்குநர் கௌதம் மேனனிடம் ஒப்படைத்து புதுவித டாக்குமெண்டரியை தயாரித்துள்ளாராம். மேலும் இந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண டாக்குமெண்டரி படத்தை நெட்பிளிக்ஸ் 25 கோடி கொடுத்து வாங்கியிருப்பது அதனினும் பிரமாதம். இந்த திரைப்படம் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு நயன்தாராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் பல்வேறு கோணத்தில் பிரகாசித்துக்கொண்டே இருக்கையில், அடுத்ததாக நயன்தாரா கட்டும் வீடுதான் அனைவரின் வாயையும் அசைபோட வைத்துள்ளது.

இவரது புதிய வீட்டில் குளியல் அறையே 1500 சதுர அடி என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் வீட்டின் மொத்த அளவு என்ன தெரியுமா? சுமார் 16,500 சதுர அடியாம்.

மேலும் இந்த வீட்டில் ஜிம், தியேட்டர் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனவாம். இந்த வீட்டின் உள் அலங்கார கட்டமைப்பிற்காகவே ஷாருக்கானின் வீட்டு அலங்கார நிபுணரை பிரத்தியேகமாக அவர் பணியமர்த்தியுள்ளாராம். 

nayanthara - Vignesh shivan

முன்னதாக ஷாருக்கானின் வீட்டு கேட்டின் பக்கம் அமைக்கப்படும் பெயர் பலகையே 7 கோடி ரூபாய் என்ற புரளியும் பரவியது என்பது குறிப்பிடதக்கது. அப்படியென்றால் அந்த நிபுணர் ஒரு 16000 சதுர அடி வீட்டை கட்டமைக்க எவ்வளவு கேட்டிருப்பார் என்று கற்பனையே செய்ய முடியவில்லை அல்லவா?

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News