செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி தாணு தயாரித்து வெளியிட்டிருக்கும் இந்தப் படம் சைகோ திரில்லராக எடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல தனுஷ் ரசிகர்கள் படத்தை ஆஹா ...ஓஹோ என புகழ்ந்துள்ளனர். அவர்கள் புகழவில்லை என்றால் தான் ஆச்சரியம். முதல் பாதி தெறியாக இருக்கிறது. இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். கூடவே, படத்தை விமர்சிப்பவர்களை வறுத்தெடுக்கவும் அவர்கள் தவறவில்லை. படம் நன்றாக இருக்கிறது, வேண்டுமென்றே தனுஷ் படத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக விமர்சிக்கிறார்கள் என காட்டமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | PS1 Release: ’எக்ஸாம் மனநிலையில் இருக்கிறேன்’ பதட்டமாக பேசும் நடிகர் கார்த்தி
தனுஷ் ரசிகர்களின் பார்வையை ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால், ஒருமுறை பார்க்கக்கூடிய அவரேஜ் படம் என தெரிவித்துள்ளனர். பெரிதாக புகழ்வதற்கு என்று எதுவும் இல்லை. யுவனின் பின்னணி இசையும் நார்மலாக இருக்கிறது. முதல் பாதி ஓகே.. இரண்டாம் பாதி, முதல்பாதியுடன் ஒப்பிடும்போது சுமார் ரகம் என கூறியுள்ளனர். இன்னும் சிலர், யுவனின் பெஸ்ட் இந்த படத்தில் இருக்கிறது. செல்வராகவனின் சிறப்பான ஸ்கீரின் பிளே, தனுஷ் நடிப்பும் தரமாக இருக்கிறது. கதைக்கு ஏற்றார்போல் நடித்து, ஒட்டுமொத்தமாக தரமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என கூறியுள்ளனர்.
— Ramesh Bala (@rameshlaus) September 29, 2022
(@pudiharicharan) September 29, 2022
நெகடிவ் விமர்சனம் என்று பார்த்தால், தனுஷின் முந்தைய படங்கள் அளவுக்கு இந்தப் படம் இல்லை. ஆவரேஜூக்கும் குறைவாக தான் இருக்கிறது. அதுவும் இரண்டாம் பாதி சீரியல் கணக்காக இருக்கிறது என விமர்ச்சித்துள்ளனர். மெச்சத்தகுந்த அளவுக்கான கதையம்சம் இரண்டாம் பாகத்தில் இல்லை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | தெலுங்கு மக்களே 'பொன்னியின் செல்வன்’ உங்கள் படம் - சுஹாசினி சர்ச்சை பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ