நானே வருவேன்: ஆடல் பாடலுடன் கோவை தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம்

கோவையில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்திற்கு ரசிகர்கள்  உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 29, 2022, 09:26 AM IST
  • நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ்
  • கோவையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்
நானே வருவேன்: ஆடல் பாடலுடன் கோவை தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் title=

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் நானே வருவேன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. அனைத்து இடங்களிலும் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்கு முன்பு ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க | PS1 Release: ’எக்ஸாம் மனநிலையில் இருக்கிறேன்’ பதட்டமாக பேசும் நடிகர் கார்த்தி

இதேபோல் கோவையிலும் தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. கோவையில் படம் வெளியான அனைத்து திரையரங்குகள் முன்பும் திரண்ட ரசிகர்கள் அதிகாலை முதலே ஆட்டம் போடத் தொடங்கினர். குறிப்பாக 100 அடி சாலையில் அமைந்திருக்கும் கங்கா திரையரங்கம் முன்பு ஏராளமான தனுஷ் ரசிகர்கள் திரண்டனர். கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் எனக் கூறிய ரசிகர்கள், அந்தவரிசையில் நானே வருவேன் திரைப்படமும் இடம்பிடிக்கும் என தெரிவித்தனர். மற்ற படங்களில் 100 விழுக்காடு நடிப்பை கொடுக்கும் தனுஷ், தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு அதற்கும் மேலான உழைப்பை கொடுத்திருப்பார் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட டீசர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News