சிறந்த ஜோடி சாய்பல்லவியா? சமந்தாவா? நாகசைதன்யா ஓபன் டாக்

திரைப்படங்களில் தனக்கு சிறந்த ஜோடி சமந்தாவா? சாய்பல்லவியா? என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் நாகசைதன்யா.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2022, 03:48 PM IST
  • ஆன் ஸ்கிரீன் பெஸ்ட் ஜோடி யார்?
  • சமந்தாவா? சாய்பல்லவியா?
  • நடிகர் நாகசைதன்யா ஓபன் டாக்
சிறந்த ஜோடி சாய்பல்லவியா? சமந்தாவா? நாகசைதன்யா ஓபன் டாக் title=

நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ’தேங்யூ’. இயக்குநர் விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் நிலையில், நாகசைதன்யாவின் வீடியோ ஒன்று கவனத்தை பெற்றிருக்கிறது. தேங்யூ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவரிடம், பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் ஜோடி யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு யோசிக்காத பதில் அளித்த அவர், தன்னுடைய முன்னாள் மனைவி சமந்தா குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க | இந்த காரணங்களுக்காக தான் புஷ்பா, பேமிலி மேனில் நடித்தேன் - சமந்தா விளக்கம்!

அந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, சாய்பல்லவி மற்றும் சமந்தா இருவருடனும் காதல் கதையம்சம் கொண்ட படங்களை நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இருவரும் சிறந்த லைவ் ஸ்டோரி ஜோடியாக இருந்ததாக தெரிவித்த அவர், இந்த கேள்விக்கு இருவருமே எனக்கு பெஸ்ட் ஆன்ஸ்கீரின் ஜோடி என குறிப்பிட்டார். " நான் யாரைப் பற்றியும் அப்படி நினைக்கவில்லை. சாய் பல்லவியுடன் லவ் ஸ்டோரி படம் செய்திருக்கிறேன். எங்களுடைய ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. மேலும் சாம், நான் இணைந்து சில அழகான காதல் கதைகளில் நடித்திருக்கிறோம்.  சமந்தாவுடன் திரையில் கெமிஸ்ட்ரியும் நன்றாக இருக்கிறது. இவர்கள் இருவரின் திரை கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும்" என நாகசைதன்யா கூறிய வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. 

அண்மையில் காபி வித் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவும், நாகசைதன்யாவைப் பற்றி கூறினார். இருவருக்கும் இடையில் சில கடினமான சூழல்கள் இருந்ததாகவும், அதனை நினைக்கும்போது மனது இன்னும் வலிக்கிறது எனக் குறிப்பிட்டார். இருப்பினும் இருவரும் அதனைக் கடந்து அவரவர் வழியில் மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். விவாகரத்து பெற்ற பிறகு இருவரும் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கியிருக்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் பாசிட்டிவான கமெண்டுகளை மட்டுமே கூறியிருக்கின்றனர். 

மேலும் படிக்க | காதலில் விழுந்த நடிகர் சித்தார்த்... இந்த முறை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News