800 என்பது கிரிக்கெட்டின் மிக அற்புதமான ஸ்பின் வீரராக திகழும் முத்தையா முரளீதரனின் பயோ பிக் ஆகும் . இப்படம் இலங்கை, யு.கே, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படும், 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து படப்பிடிப்பு நடைபெறும். தயாரிப்பாளர்கள் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த படத்தை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.
முத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் பிரபலம் என்பதால், இந்த படம் தென்னிந்திய மொழிகளைத் தவிர இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஆங்கில வசனங்களுடன் ஒரு சர்வதேச பதிப்பையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, இலங்கை பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் (800 டெஸ்ட் விக்கெட்டுகளை வென்ற வரலாற்றில் ஒரே பந்து வீச்சாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது) எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புகழ்பெற்ற தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நிச்சயம் இதற்கான சரியான தேர்வாக இருப்பார் என ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ப்ரீ-ஷோ கிரிக்கெட் லைவ் நிகழ்வில் பேசிய முத்தையா முரளீதரன் தெரிவித்தார், “ஸ்கிரிப்ட் தயாரானதும், இந்த படத்திற்கு சிறந்த பொருத்தம் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் அல்ல என்று நாங்கள் நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என்று நான் நினைக்கிறேன். நான் அவரை முழுமையாக நம்புகிறேன்” எனக் கூறினார்.
போட்டிக்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்து விஜய் சேதுபதி மேலும் கூறுகையில், “அவரது கதையைக் கேட்க, முரளி சாரோட நேரத்தை செலவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எங்கு சென்றாலும், மிகுந்த வரவேற்பு உள்ளது. அவரது உண்மை நிறைந்த வாழ்க்கையை நான் நேசிக்கிறேன், ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில் போட்டிகளில் கிரிக்கெட் வீரராக பார்த்திருக்கிறார்கள், ஆனால் மிகச் சிலருக்கு முரளி சாரின் ஆளுமையை அருகில் இருந்து தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவர் மிகவும் அனபாக பழகக் கூடிய ஒரு அழகான மனிதர், அவருடைய கதையில் நடிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ” என்றார்
ALSO READ | 45 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித்தின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe