இந்திய சினிமாவை பொறுத்தவரை, பாலிவுட்டில் நடிகர்களும், சினிமா துறையில் இருக்கும் அவர்களது குடும்பத்தினரும்தான் அதிகம் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் இருப்பவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதே போல தெலுங்கு சினிமாவிலும் எங்கு திரும்பினாலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் அந்த திரையுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.
அந்த குடும்பத்தில் இருந்து 4 சூப்பர் ஸ்டார் நடிகர்கள் உதயமாகியுள்ளனர், சிலர் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனங்களையும் வைத்துள்ளனர். ஒரு சிலர், சினிமா மட்டுமன்றி அது சம்பந்தப்பட்ட இதர தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இவர்களின் சொத்து மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடிக்களை தாண்டுகிறது. அந்த குடும்பம் யார்? அந்த குடும்பத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் யார்? இவர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? இதோ முழு விவரம்!
மேலும் படிக்க | வெயிட் பார்டியாக மாறிய சந்தானம்..முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பம்!
தென்னிந்திய சினிமாவின் பாதியை ஆண்டு வருபவர்கள், அல்லு-கொண்டிலா குடும்பம். இவர்களை மெகா குடும்பம் என்றும் அழைப்பர். தாத்தா, அப்பாவில் ஆரம்பித்து பேரன்-பேத்தி வரை மூன்று தலைமுறைகளாக தெலுங்கு திரையுலகில் இந்த குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1950களில் பிரபல காமெடி நடிகராக இருந்த அல்லு ராமலிங்கையாவால்தான் இந்த குடும்பம் தொடங்கப்பட்டுள்ளது. இவர், நடிகராக மட்டுமன்றி சில படங்களை தயாரித்தும் வழங்கியிருக்கிறார். இவரது மகள் சுரேகா, ரசிகர்களால் ‘மெகா ஸ்டார்’ என அழைக்கப்படும் சிரஞ்சீவியை மணந்தார். இதிலிருந்து, மெகா குடும்பம் பெருக ஆரம்பித்தது. இந்த குடும்பத்தில் இருந்து ராம் சரண், அல்லு அர்ஜுன், பவண் கல்யான், நாகேந்திர பாபு, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் உள்பட பல நடிகர் நடிகைகள் திரையுலகில் இருக்கின்றனர். இந்த மெகா குடும்பம்தான் இருப்பதிலேயே இந்திய சினிமாவின் பணக்கார குடும்பமாக பார்க்கப்படுகிறது.
மொத்த சொத்து மதிப்பு..இத்தனை ஆயிரம் கோடியா???
அல்லு-கொண்டீலா குடும்பத்திலேயே நடிகர்கள் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும்தான் பணக்காரர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கு இணையாக அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜுனும் அதிக சொத்து மதிப்புகளை வைத்துள்ளனராம். பல வீடுகள், பல்லாயிரக்கணக்கான நிலங்கள், சொகுசு கார்கள், வெளிநாடுகளில் சொத்துக்கள் என இவர்கள் குடும்பத்திற்கான சொத்து மதிப்பின் லிஸ்ட் மட்டும் நீண்டு கொண்டே போகிறது. இது மட்டுமன்றி, இவர்கள் கீதா ஆர்ட்ஸ் அஞ்சனா ப்ரொடக்ஷன்ஸ், பவன் கல்யாண் கிரியேடிவ் வர்க்ஸ், கொண்டீலா ப்ரொடக்ஷன் நிறுவனம், அல்லு ஸ்டுடியோ என தயாரிப்பு நிறுவனங்களும் நிறையவே இருக்கின்றன.
அது மட்டுமா? இந்த குடும்பம், அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா எனும் கட்சியை வைத்துள்ளார். சிரஞ்சீவி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரஜா ராஜ்யம் எனும் கட்சியை நடத்தி வந்தார். இவரது மகன் ராம் சரணும், அவரது உறவினர் அல்லு அர்ஜுனும் இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கின்றனர். மொத்தத்தில் இவர்களின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இதைக்கேட்ட ரசிகர்கள், ‘அம்மாடியோவ்’ என அசந்து போயுள்ளனர்.
மேலும் படிக்க | கோடிகளில் புரளும் நடிகர் சூரி! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ