மெர்சல் வெற்றி அனைவருக்கும் நன்றி கூறிய தளபதி விஜய்

Last Updated : Oct 26, 2017, 02:37 PM IST
மெர்சல் வெற்றி அனைவருக்கும் நன்றி கூறிய தளபதி விஜய் title=

தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 100-வது படமாக நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான படம் தான் மெர்சல். பல தடைகளுக்கு பிறகு தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இதில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் நடிகர் விஜயை கடிமையாக விமர்சனம் செய்தனர். தியேட்டரில் படத்தை ஓட விடமாட்டோம் எனவும் எச்சரித்தனர். ஆனால் தமிழக முழுவதும் விஜய் மற்றும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். படம் நல்ல வசூலையும் அள்ளியது.

இதனையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:-

Trending News