Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?

Megha Akash Marriage:பிரபல தமிழ் நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன்தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 8, 2023, 10:52 AM IST
  • ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த ஹீரோயின், மேகா ஆகாஷ்.
  • இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்.
  • மாப்பிள்ளை யார் என்பதும் தெரியவந்துள்ளது.
Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?  title=

பேட்ட படத்தில் சிம்ரனுக்கு மகளாக நடித்து பிரபலமானவர், மேகா ஆகாஷ். இந்த படத்தில், நடிகர்கள் ரஜினி காந்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், இப்போது இரு மொழிகளிலும் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. 

தனுஷ் பட நாயகி..

மேகா ஆகாஷ், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியிருந்த “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக தனுஷ் நடித்திருந்தார். லேகா-ரகு என்ற இரண்டு காதலர்களை சுற்றி நடக்கும் கதைதான் இது. எப்போதோ வெளியாகயிருந்த இந்த படம் ஒரு சில காரணங்களால் மிகவும் தாமதமாக 2019ஆம் ஆண்டில்தான் வெளியானது. படம், ஏக விமர்சனங்களை சந்தித்தாலும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுடன் சேர்ந்து மேகா ஆகாஷும் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். 

மேலும் படிக்க | இரண்டு பெரிய இந்திய பிரபலங்களுடன் சாகச நிகழ்ச்சி நடத்த ஆசைப்படும் பியர் கிரில்ஸ்..!

விரைவில் திருமணம்? 

பக்கா சென்னை பெண்ணான மேகா ஆகாஷ், பாதி மலையாளி. இவரது அம்மா கேரளாவை சேர்ந்தவர். தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே “புடிச்சா புளியங்கொம்பதான் பிடிப்பேன்” என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்த இவர், இப்போது வரை அதையே பின்தாெடர்கிறார். தற்போது 27 வயதாகும் மேகா ஆகாஷிற்கு விரைவில் அவரது பெற்றோர் திருமணம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இவர்தான் மாப்பிள்ளையா? 

2017ஆம் ஆண்டிலிருந்து திரையுலகில் வலம் வரும் மேகா ஆகாஷ் குறித்து இதுவரை எந்த காதல் வதந்தியும் பெரிதாக வந்ததில்லை. இவ்வளவு ஏன், ஒரு சின்ன கிசுகிசு கூட தன்னைப்பற்றி வெளிவராத அளவிற்கு பார்த்துக்கொண்டார், மேகா ஆகாஷ். இந்த நிலையில்தான் இவரது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவல்களின் படி, மேகா ஆகாஷ் ஒரு பிரபல அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், இந்த திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த மாப்பிள்ளை யார் என்று அறிந்துகொள்ளும் விஷயத்தில் யார் ஆர்வமுடன் இருக்கிறார்களோ இல்லையோ, மேகாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேகா ஆகாஷ் நடித்திருந்த படங்கள்..

நடிகை மேகா ஆகாஷ், ரஜினியுடன் ‘பேட்ட’ படத்திலும், தனுஷுடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும், சிம்புவுடன் ‘வந்தா ராஜாவதான் வருவேன்’ படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி தெலுங்கிலும் நிதின், அர்ஜூன், ஸ்ரீகாந்த் சித்ராம் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். பாலிவுட்டில் கூட ஓரிரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 

மேகா நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள்..

மேகா ஆகாஷ், நல்ல கதைகளை தேர்ந்தொடுப்பதிலும் கெட்டிக்காரர். இவரது நடிப்பில் உருாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகிளில் ரகுல் ப்ரீத் சிங்குடன் ‘பூ’ என்ற பேய் படத்திலும் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படம், ஜியோ சினிமாவில் வெளியானது. 

மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News