மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது...

மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு செவ்வாய்க்கிழமை தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 

Last Updated : Sep 24, 2019, 08:23 PM IST
மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது... title=

மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு செவ்வாய்க்கிழமை தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 

இதற்காக அமிதாப் பச்சனை வாழ்த்தி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் தெரிவிக்கையில்., "2 தலைமுறைகளாக மக்களை மகிழ்வித்தும், ஊக்கமளித்தும் வரலாறு படைத்த அமிதாப் பச்சன்  தாதாசஹாபல்கே விருதுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நாடும் சர்வதேச சமூகமும் மகிழ்ச்சியாக உள்ளன. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திரைப்பட சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்-இயக்குனர் தாதாசாகேப் பால்கேவின் நினைவாக இந்த விருது 1969-ஆம் ஆண்டில் துவங்கி வழங்கப்பட்டு வருகிறது. திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் சார்பாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதில் ஒரு ஸ்வர்ணா கமல் மற்றும் ரூ .10 லட்சம் ரொக்கம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பணி முன்னணியில், அமிதாப் பச்சன் அடுத்ததாக ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இணையில் 'பிரம்மஸ்திரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆலியா மற்றும் ரன்பீர் உடனான அவரது முதல் ஒத்துழைப்பு இதுவாகும். கரண் ஜோஹரின் தர்ம புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'பிரம்மஸ்திரா' அயன் முகர்ஜி தலைமையில் 2020-ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரம்மஸ்திரத்திற்குப் பிறகு, பிக் பி 'ஜுண்ட்', 'செஹ்ரே' மற்றும் 'குலாபோ சீதாபோ' ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News