கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான மலையாளப் படமான ‘பிரேமலு’ விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கவே தற்போது தமிழிலும் பிரேமலு படம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வசூல் சாதனையை படைத்துள்ள 'பிரேமலு' இந்தியாவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பிரேமலு படத்தின் தமிழ் வெர்சனுக்கு தணிக்கை குழு U சர்டிபிகேட் வழங்கியுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் திலீஷ் போத்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ளவர் இப்போது முன்னணி நடிகர்! யாரென்று தெரிகிறதா?
காதல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தை ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் சியாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர். நஸ்லென் கே கஃபூர், மேத்யூ தாமஸ், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், அகில பார்கவன் மற்றும் ஷியாம் மோகன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவில் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வரும் ஹீரோ நஸ்லென் கே கஃபூர் (சச்சின்) சேலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிப்பை முடிக்கிறார். இதை தொடர்ந்து லண்டனிற்கு தனது நண்பருடன் சேர்ந்து செல்ல ஏற்பாடு செய்கிறார். ஆனால் இவருக்கு மட்டும் விசா ரிஜெக்டாகி விடுகிறது. இதனால் விரட்டியில் இருக்கும் ஹீரோ சச்சின் தனது இன்னொரு நண்பரான சங்கீத் பிரதாப் (அமல் டேவிஸ்) உடன் ஹைதராபாத்திற்கு GATE கோச்சிங் பயிற்சிக்கு செல்கிறார்.
ஒரு திருமண நிகழ்வில் கதாநாயகி மமிதா பைஜுவை (ரீனு) பார்க்கிறார் சச்சின். அவரை பார்த்தவுடன் காதலிலும் விழுகிறார். அந்த திருமண நிகழ்விற்கு பிறகு இவர்கள் நண்பர்களாக மாறுகின்றனர். ரீனு அவருடன் ஐடியில் பணிபுரியும் அகில பார்கவன் (கார்த்திகா) உடன் வசித்து வருகிறார். ஹீரோ சச்சின் மற்றும் அவரை நண்பர் இருவரும் ரீனு வீட்டிற்கு அருகிலேயே ஒரு மேன்ஷனில் குடியேறுகின்றனர். கதாநாயகி ரீனுவிற்கு தன்னை விட வயதில் மூத்த மற்றும் நன்கு செட்டிலாகி உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் ஹீரோ சச்சின் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று கூட தெரியாமல் ஊர் சுற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததா? இறுதியில் ஒன்றாக சேர்ந்தார்களா என்பதே பிரேமலு படத்தில் கதை.
படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டு இருந்தே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். சில காட்சிகளே வரும் மேத்யூ தாமஸ், மமிதாவின் நண்பராக வரும் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷியாம் மோகன், மமிதாவின் கேங், அவர்களது பெற்றோர் என்று அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மிகவும் எதார்த்தமாக உருவாகி உள்ள இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல ஒரு பொழுது போக்கு படமாக உருவாகி உள்ளது. தமிழ் டப்பிங்கும் பெரிதாக உறுத்தல் இல்லாமல் நன்றாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அதிக வசூல் செய்த டாப் 3 மலையாளப் படமாக மாற வாய்ப்புள்ளது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பிரேமலு' தற்போது உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ