கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், மாமன்னன். இந்த படத்தினை மாரி செல்வராஜ் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை நேற்று வெளியானது. இந்த விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக சிவகார்த்திகேயன் தலையில் குல்லா போட்டுக்கொண்டு புதுலுக்கில் வந்தார்.
உதயநிதியை கலாய்த்த சிவகார்த்திகேயன்
உதயநிதி, நடிகராக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் வலம் வருகிறார். தற்போது அவர் முழுநேரமாக அரசியலில் ஈடுபட்டு வருவதால் சினிமாவில் நடிக்க நேரம் கிடைப்பதில்லை. இதனால் 3 ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார். மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் சின்ன சின்ன விஷயங்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர். அது போல, நடிகர் சிவகார்த்திகேயனும் உதயநிதி குறித்து சில சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “விளையாட்டா சினிமா-ல நடிக்க ஆரம்பிச்சீங்க..இப்போ விளையாட்டு துறை அமைச்சராகவே ஆகிட்டிங்க..” என்று உதயநிதியை கலாய்த்தார். இது அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | பட வேட்டைக்கு தயாரா மக்களே? இந்த மாதம் வெளியாகவுள்ள படங்களில் லிஸ்ட்!
“புது கெட்டப்பை வெளியில் காட்ட முடியாது..”
நேற்றைய விழாவில் கலந்து காெண்ட சிவகார்த்திகேயன்ன தலையில் குல்லா அணிந்து, தனது ஒரு முடி கூட வெளியில் தெரியாத அளவிற்கு கவர் செய்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்களும் பத்திரகையாளர்களும் இதுகுறித்து கேட்டனர். அதற்கு அவர், ஃபர்ஸ்ட் லுக் வரும் வரை தன்னுடைய லுக்கை வெளியில் காண்பிக்க கூடாது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கேட்டு கொண்டதாக கூறினார். கமல் ஹாசனும் மாமன்னன் படவிழவிற்கு வந்திருந்தார், அவர் முன்னிலையில் தான் போட்டுக்கொண்டு வந்திருப்பதையெல்லாம் கெட்-அப் என்று சொல்ல வேண்டாம் என காமெடியாக கூறினார்.
“நான் சந்தாேஷமாக வழியனுப்பி வைக்கிறேன்..” விஜய் ஆண்டனி
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நேற்றைய விழாவில் கலந்து காெண்டார். அப்போது அவர், உதயநிதியை அனைவரும் சினிமாவை விட்டு போக வேண்டாம் என்று கூறுவதாகவும் ஆனால் நான் அவரை சந்தோஷமாக வழியனுப்பி வைக்கிறேன் என்றும் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “உதயநிதியை சினிமாவை விட்டு போக வேண்டாம் என எல்லோரும் கூறுகிறார்கள்..ஆனால் நான் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறேன். நீங்கள் அங்கேயே இருங்கள்” என பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.
போனி கபூர்:
தயாரிப்பாளர் போனி கபூரும் நேற்றைய விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் இன்னும் ஒரு படத்தில் தன்னுடன் சேர்ந்து உதயநிதி பணியாற்றினால் நன்றாக இருக்கும் என கூறினார். மேலும், அடுத்து தான் பார்த்த பெண்களிலேயே தனது மனைவியை அழகாக உள்ளது கீர்த்தி சுரேஷ்தான்” என்றும் அவர் கூறினார். இவரது இந்த பேச்சு இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பாடல்கள் அருமை:
மாமன்னன் படத்தின் பாடல்கள் தற்போது இணையத்திலும் வெளியாகியுள்ளன. ராசாக்கண்ணு மற்றும் ஜிகு ஜிகு ரயிலு ஆகிய பாடல்கள் முன்னரே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பிற பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இசையும் அருமையாக உள்ளதாக ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata