சென்னை: இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் இந்தி, தெலுங்கில் படம் இயக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை அவர் படம் இயக்க அனுமதிக்கக் கூடாது என தடைகோரி இந்தி மற்றும் தெலுங்கு ஃபிலிம் சேம்பர்களுக்கு லைகா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், ஷங்கர் ராம் சரண் மற்றும் ரன்வீர் சிங் படங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பு நிறுவனம் செய்த தாமதமே இந்தியன் 2 படப்பிடிப்பு நின்று போனதற்கு காரணம் என்று பதில் மனுவில் குறிப்பிட்ட ஷங்கர், திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் கமலஹாசனும் (Kamal Haasan) இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் தாமதத்திற்கு காரணம் என்று தெரிவித்திருந்தார். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் லைகா புரொடக்ஷன் (Lyca Productions) நிறுவனத்தின் சட்ட நடவடிக்கைக்கு அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தான் படபிடிப்பு தாமதம் ஆனதற்கு காரணம் தான் அல்ல என்று பதிலடி கொடுத்திருந்தார்.
Also Read | இந்தியன் தாத்தா மீண்டும் வருவாரா? மாட்டாரா?
தற்போது, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் (Director Shankar), லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் கமல்ஹாசனுக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகமாகிறது. இந்தியன் 2 (Indian 2) படப்பிடிப்பு தொடர்பாக ஏற்பட்ட இந்த கருத்து மோதல், தற்போது வெட்டவெளிச்சமாகி நீதிமன்றத்தில் இருக்கிறது.
இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை வேறு படங்களை இயக்க ஷங்கரை அனுமதிக்கக் கூடாது, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்தப் படத்தின் தயாரிப்ப்பு நிறுவனமான லைகா கடிதம் எழுதி உள்ளது.
2.0 படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு, கமலை வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தார் ஷங்கர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரம்மாண்டமாக திரைப்படம் எடுப்பவர் என்று பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர், 270 கோடி பட்ஜெட் என்று முடிவு செய்திருந்தார். பிறகு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தார் ஷங்கர்.
Also Read | கோவிட் -19 நெருக்கடியிலும் கங்கோத்ரி ஆலயம் திறக்கப்பட்டது
படப்பிடிப்பு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், படபிடிப்புத் தளாத்தில் ஏற்பட்ட விபத்தும், அதில் சிலர் பலியானதும் கவலைகளை அதிகரித்தது.
இதனால் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு திரைப்படத்தின் கதாநாயகன் கமலஹாசன் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்ததால் திரைப்பட படபிடிப்பு நிறுத்தம் மேலும் நீண்டது.
கிடைத்த இடைவெளியில் இந்தியன் 2 படத்துக்குப் பதில் தெலுங்கு, தமிழில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க தீர்மானித்தார் ஷங்கர். அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருந்தபோதே, வசூலை அள்ளிக் குவித்த அந்நியன் (Anniyan) படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்த இயக்குநர் ஷங்கர், கதாநாயகனாக ரன்வீர் சிங்கை ஒப்பந்தம் செய்தார்.
Also Read | ஷங்கர் இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்
இந்தத் தகவல் வெளியானதும் உஷாரானது லைகா நிறுவனம். ஷங்கர் திரைப்படத்தை பிரம்மாண்டமாக எடுப்பவர், ஒரு திரைப்படத்தை எடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்பவர் என்பது ஊரறிந்த உண்மை என்ற நிலையில், ஷங்கரின் திட்டப்படி சென்றால், இன்னும் நான்கு வருடங்களுக்கு ஷங்கரை பிடிக்க முடியாது என்பது நிறுவனத்திற்கு கவலையை ஏற்படுத்தியது.
வேறு வழியில்லாமல் லைகா நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை எடுத்தது. இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே வேறு படங்களை அவர் இயக்க வேண்டும் என இடைக்கால தடை கேட்டது. அதனை மறுத்த நீதிமன்றம், ஷங்கர் தரப்பிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்
இதற்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர், லைகா செய்த தாமதமே இந்தியன் 2 படப்பிடிப்பு நின்று போனதற்கு காரணம் என்றும், கமலஹாசனும் படபிடிப்பு தாமதத்திற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது மனு மீதான விசாரணை ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் இந்தி, தெலுங்கில் படம் இயக்க அனுமதிக்க வேண்டும்,
அதுவரை அவர் படம் இயக்க அனுமதிக்கக் கூடாது என தடைகோரி இந்தி மற்றும் தெலுங்கு ஃபிலிம் சேம்பர்களுக்கு லைகா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், ஷங்கர் ராம் சரண் மற்றும் ரன்வீர் சிங் (Ranveer Singh) படங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR