சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம் ஆனது நடிகர் சத்யராஜ் இயக்குனர்கள் வெற்றிமாறன் ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன் நடிகை ரோகிணி எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது!
உதவி இயக்குனர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் சென்னை சாலிக்கிராமம் எண் 1 திலகர் தெருவில் இயக்குனர் எழுத்தாளர் அஜயன்பாலா இந்த பாலுமகேந்திரா நூலகத்தை துவக்கியிருக்கிறார். இந்த துவக்க விழாவில பேசிய நடிகர் சத்யராஜ். "கடலோரக்கவிதைகள் படத்தை பார்த்து விட்டு சிவாஜி என்னை அடுத்த பத்து வருடங்களுக்கு உன்னை யாரும் அசைச்சிக்க முடியாது என்றார் வேதம் புதிது பார்த்துவிட்டு எம் ஜி ஆர் கையைபுடிச்சி முத்தம் கொடுத்தார்., ஓன்பது ரூபாய் நோட்டு பார்த்துவிட்டு பாலுமகேந்திரா கட்டிபிடித்து கண்கலங்கி பாராட்டினார். அஜயன்பாலா எழுதிய மார்லன் பிராண்டோ புத்தகம் வாசித்தப் பிறகு தான் மொழி தெரியாத படங்களிலும் நடிக்கலாம் என தெரியவந்து. அதுவரை நடிக்க மறுத்த தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதற்கு காரணமாயிருந்த அஜயன்பாலா உருவாக்கியுள்ள இந்த நூலகத்துக்கு பெரிசா உதவணும்னு நெனக்கிறேன் கூடியவிரைவில் அதை அவரோடபேசி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜயன்பாலா தெரிவிக்கையில் நல்ல திரைப்படங்களை இயக்க விரும்பும் அனைவருக்கும் வாசிப்புப் பழக்கம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு இந்த நூலகம் நிச்சயமாக வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளார்.